மேலும் அறிய
உலகில் சமத்துவம் நிலவ மதுரையில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
இறைவனுக்காக தங்களின் கடமையை நிறைவேற்றும் வகையில் வீடுகளில் ஆடுகளை அறுத்து அதன் இறைச்சிகளை ஏழை, எளிய மக்களுக்கு வழங்கி தியாகத்திருநாள் கடமையை நிறைவேற்றினர்.
![உலகில் சமத்துவம் நிலவ மதுரையில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை Bakrid 2024 There is peace in the world Muslims who performed special prayers in Madurai - TNN உலகில் சமத்துவம் நிலவ மதுரையில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/17/10f6a8665a03b4b75dad4d033fc176421718604485536184_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மதுரையில் சிறப்பு தொழுகை
மதுரையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திடல்கள் மற்றும் பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். உலக நன்மை வேண்டியும், உலகில் அமைதியும், சமத்துவமும் நிலவ வேண்டி சிறப்பு துஆ செய்தனர்.
பக்ரித் பண்டிகை 2024
Bakrid 2024 Madurai: உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் பக்ரீத்துக்கு தனி இடம் உண்டு. இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் இசுலாமிய நாட்காட்டியின் 12-வது மாதமான துல் ஹஜ் மாதத்தின் 10 ஆம் நாள் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு இன்று 17-ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திடல்கள் மற்றும் பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.
மதுரை பக்ரீத் பண்டிகை 2024
ஈதுல் அல்ஹா எனும் பக்ரித் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட மகபூப்பாளையம், தமுக்கம் மைதானம், நெல்பேட்டை, ஹாஜிமார்தெரு, கோரிப்பாளையம்,ஆனையூர், கலைநகர், தபால்தந்திநகர், வள்ளுவர் காலனி, சிலைமான், மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி, அலங்காநல்லூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள திடல்களிலும் (திறந்தவெளி), பள்ளிவாசல்களிலும் பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்பு தொழுகையில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட எராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.
தியாகத்திருநாள் கடமையை நிறைவேற்றினர்.
மதுரை எல்லிஸ்நகர் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்ற சிறப்பு திடல் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள், பெண்கள், குழந்தைகள் கலந்துகொண்டனர். தொழுகையின் முடிவில் இஸ்லாமிய பேச்சாளர்கள் பக்ரீத் பண்டிகையின் நடைமுறைகள் மற்றும் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தனர். பின்னர் உலக நன்மை வேண்டியும், உலகில் அமைதியும், சமத்துவமும் நிலவ வேண்டி சிறப்பு துஆ செய்தனர். பக்ரீத் பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பின் இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டனர். இதனை தொடர்ந்து இறைவனுக்காக தங்களின் கடமையை நிறைவேற்றும் வகையில் வீடுகளில் ஆடுகளை அறுத்து அதன் இறைச்சிகளை ஏழை, எளிய மக்களுக்கு வழங்கி தியாகத்திருநாள் கடமையை நிறைவேற்றினர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Bakrid Goat Sale: பக்ரீத் பண்டிகை... களைகட்டிய திருமங்கலம் ஆட்டுச்சந்தை - ரூ. 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Biannual Admission: இனி ஆண்டுக்கு 2 முறை கல்லூரியில் சேரலாம்; யுஜிசி அதிரடி அறிவிப்பு - முழு விவரம்!
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
வணிகம்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion