Vikravandi By - Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் - அண்ணாமலை
Vikravandi By - Election: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், பாமக போட்டியிடும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
Vikravandi By - Election: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், பாமக போட்டியிடும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதியில் பாமக போட்டி:
இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், ”தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10 ம் தேதி அன்று நடைபெற உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் ஒருமனதாக எடுத்த முடிவின்படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியானது விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று அறிவிக்கப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் வெற்றி பெற அனைவரும் இணைந்து பாடுபடுவோம்! வெற்றி பெறுவோம்!” என குறிப்பிட்டுள்ளார்.
அறிவிக்கை
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) June 14, 2024
தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10 ம் தேதி அன்று நடைபெற உள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் ஒருமனதாக எடுத்த முடிவின்படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி… pic.twitter.com/TrGhrgrMLb
திமுக Vs பாமக மோதல்:
திமுக சார்பில் அன்னியூர் சிவா விக்கிரவாண்டி தொகுதி இடைதேர்தலின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேநேரம், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டாலும், வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதேநேரம், நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இன்று முதல் வேட்புமனு தாக்கல்:
கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில், திமுக சார்பில் புகழேந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி அவர் உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கான வாக்குப்பதிவு வரும் ஜுலை 10ம் தேதி நடைபெற உள்ளது. பதிவாகும் வாக்குகள், ஜுலை 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. இதனை முன்னிட்டு, தேர்தலில் போட்டியிடுவோர் விருப்பமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்று தொடங்குகியது. தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். அதன்படி, வரும் 21ம் தேதி வரை விருப்பமுள்ள நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்கள் வரும் 24ம் தேதி பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் மற்றும் 26ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும். தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் அத்தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் செய்து வருகின்றனர்.