வைகாசி கிருத்திகை: கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலய முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வைகாசி மாத கிருத்திகை முன்னிட்டு முருக பெருமானுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்.
கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வைகாசி மாத கிருத்திகை முன்னிட்டு முருக பெருமானுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் அழகன் முருகனுக்கு வைகாசி மாத கிருத்திகை முன்னிட்டு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம் ,தேன்,இளநீர்,எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து அழகன் முருகனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து கையில் வேலுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி காட்சியளித்தார்.
அதைத் தொடர்ந்து உதிரிப் பூக்களால் ஆலயத்தின் சிவாச்சாரியார் முருகனுக்கு நாமாவளிகள் கூறி தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்துடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
தேர்வீதி அருள்மிகு விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி மாத சஷ்டி பூஜையை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய சிவாச்சாரியார் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்