Aadi Peruku 2025: நாளை ஆடிப்பெருக்கு.. வீட்டிலே வழிபடுவது இப்படித்தான் பக்தர்களே!
Aadi Peruku 2025: ஆடிப்பெருக்கு நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், வீட்டிலே வழிபடுவது எப்படி? என்பதை கீழே காணலாம்.

Aadi Peruku 2025: ஆடி மாதம் என்றாலே விசேஷங்கள் நிறைந்த மாதம் ஆகும். ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய், ஆடி அமாவாசை, ஆடிப்பூரம் என்று பல மங்களகரமான நாட்கள் உள்ளது. குறிப்பாக, ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பெருக்கு தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையாக உள்ளது.
நாளை ஆடிப்பெருக்கு:
நாளை தமிழ்நாடு முழுவதும் ஆடிப்பெருக்கு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பஞ்சபூதங்களில் மிகவும் முக்கியமானது நீர். மனிதன் பூமியில் வாழ்வதற்கு மிகவும் அவசியமானதாக இந்த நீர் உள்ளது. இந்த நீரைப் போற்றும் ஒரு விழாவாகவும் ஆடிப்பெருக்கு கருதப்படுகிறது.
ஆடிப்பெருக்கு நன்னாளில் புதுமணத் தம்பதிகள் தாலியை மாற்றிக் கொள்வதும், காவிரி போன்ற புண்ணிய நதிகளின் ஆற்றங்கரையில் வழிபடுவதும் வழக்கம் ஆகும். ஆடி மாதம் 18ம் நாளே ஆடிப்பெருக்காக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வீட்டிலே வழிபாடு மேற்கொள்வது எப்படி? என்பதை கீழே காணலாம்.
வீட்டிலே வழிபடுவது எப்படி?
1. ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்றே வீட்டை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பாத்திரங்களையும் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
2. ஆடிப்பெருக்கான நாளை காலை எழுந்தவுடன் குளித்து சுத்தமாக வேண்டும்.
3. பின்னர், வீட்டில் உள்ள நன்றாக கழுவிய செம்பை எடுத்து அதில் நிறைவாக தண்ணீர் ஊற்ற வேண்டும்.
4. இப்போது, அந்த தண்ணீரில் இறைவனை நினைத்து மஞ்சளை சேர்க்க வேண்டும். இப்போது, மஞ்சள் கலந்த அந்த தண்ணீர் தீர்த்தமாக கருத வேண்டும்.
5. இந்த தீர்த்தம் முன்பு விளக்கேற்ற வேண்டும். இந்த தீர்த்தம் நிறைந்த குடத்தை அம்மன் படத்தின் முன்பு வைக்க வேண்டும்.
6. இந்த அம்மன் படத்திற்கு பூக்களைப் போற்றி வணங்க வேண்டும்.
7. பின்னர், அந்த தீர்த்த நீருக்கும், அம்மன் உள்ளிட்ட மற்ற சாமி படங்களுக்கும் தீபாராதனை காட்ட வேண்டும்.
8. தீபாராதனை காட்டும்போது தாமிரபரணி, வைகை, காவிரி கங்கை, யமுனை, நர்மதை போன்ற புண்ணிய நதிகளை மனதார வணங்க வேண்டும்.
9. ஆடிப்பெருக்கை முன்னிட்டு படைத்த சர்க்கரை பொங்கலை படையலிட்டு பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.
10. செம்பில் உள்ள நீரை கால் படாத இடத்தில் உள்ள செடி மற்றும் கொடிகளில் ஊற்றி விட வேண்டும்.
இந்த பூஜை மூலமாக வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம் ஆகும். மேலும், ஆடிப்பெருக்கு நன்னாளில் வீட்டிலும் புதுமண தம்பதிகள் தங்களது தாலியைப் பிரித்துக கோர்த்துக் கொள்ளலாம். திருமணம் ஆகாத பெண்களும் மஞ்சள் கயிறு கோற்றி மாற்றிக் கொண்டால் திருமணம் ஆகும் என்பது ஐதீகம் ஆகும். அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடுவதும் சிறப்பாகும்.





















