மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
நாகையில் 32 அடி உயரமுள்ள அத்திவிநாயகர் சுவாமி வெள்ளோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
இந்தியாவில் முதல்முறையாக 32 அடி உயரமுள்ள அத்திவிநாயகர் சுவாமி வெள்ளோட்டம்
இந்தியாவில் முதல்முறையாக 32 அடி உயரமுள்ள அத்திவிநாயகர் சுவாமி சிலை வெள்ளோட்டம் நடைபெற்றது. 1 கோடி ரூபாய் மதிப்பில் 16 டன் எடை கொண்ட அத்தி விநாயகர் ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாகப்பட்டினத்தில் ஒவ்வொரு ஆண்டும் 32 அடி விஸ்வரூப விநாயகர் ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். நாகை நீலாய தாட்சியம்மன் ஆலயம் அருகில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி என்று மேள தாளங்கள் முழங்க பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நாகையில் முக்கிய வீதிகள் வழியாக நாகூர் சென்றடைந்து. அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை நாகூர் வெட்டாட்டில் கரைக்கப்படுவது வழக்கமாக இருந்து.
இந்த நிலையில் 32 அடி விஸ்வரூப விநாயகர் ஊர்வலம் 35 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து இவ்வாண்டு ஒரு கோடி ரூபாய் மதிப்பில் திருவாரூர் மாவட்டம் ஆண்டிபந்தலில் விஸ்வரூப விநாயகர் குழு சார்பாக அத்தி மரத்திலான விநாயகர் சிலை உருவாக்கும் பணி துவங்கப்பட்டது. இந்த விநாயகர் சிலை உருவாக்கும் பணியில் நாள்தோறும் பதினைந்துக்கும் அதிகமான சிற்பிகள் ஸ்தபதியார்கள் எட்டு மாதம் இரவு பகலாக விநாயகரை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இப்பணிகள்யாவும் நிறைவடைந்த நிலையில் இன்று 32 அடியில் பிரம்மாண்ட அத்தி விநாயகர் சுவாமி வெள்ளோட்டம் நடைபெற்றது. நாகை நீலாயதாட்சி அம்மன் கோவிலில் இருந்து துவங்கிய வெள்ளோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று அத்தி விநாயகரை தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் அத்திவரதருக்கு அடுத்தபடியாக, இந்தியாவிலேயே முதல்முறையாக 32 அடி உயரத்தில் 16 டன் எடையில் உருவாக்கப்பட்டுள்ள அத்தி விநாயகரின் பிரம்மாண்ட மரத்திலான சிலை ஆன்மீக பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த ஓராண்டாக தொடங்கப்பட்ட இப்பணியில் திருநாவுக்கரசு ஸ்தபதியார் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் 1200 கனஅடி அத்தி மரத்தை சேகரித்து 32 அடி உயரமும் 18 அடி அகலமும் கொண்ட இந்த அத்தி விநாயகர் சுவாமி சிலையை உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion