மேலும் அறிய

திருநாங்கூரில் ஒரே நேரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்த 11 பெருமாள்கள் - பக்தர்கள் பரவசம்

திருநாங்கூர் திவ்யதேச கோயில் நடைபெற்ற 11 தங்க கருடசேவை உத்ஸவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாள்களை தரிசித்தனர். 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருநாங்கூர் பகுதியில் 108 வைணவ திவ்ய தேசங்களான, நாங்கூர் மணிமாடக்கோயில் ஸ்ரீ நாராயண பெருமாள், அரிமேய வின்னக ரம் ஸ்ரீ குடமாடு கூத்தர், ஸ்ரீ செம்பொன்னரங்கர், ஸ்ரீபள்ளிகொண்ட பெருமாள், ஸ்ரீ வண்புருடோத்தம பெருமாள், ஸ்ரீ வைகுந்தநாதன், திருவெள்ளக்குளம் ஸ்ரீஅண்ணன் பெருமாள், திரு மேணிக்கூடம் ஸ்ரீவரதராஜ பெருமாள், கீழச்சாலை ஸ்ரீமாதவப்பெருமாள், பார்த்தன்பள்ளி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள், திருகாவாளம்பாடி கோபாலன்' ஆகிய 11 திவ்யதேச கோயில்கள் அமைந்துள்ளன. 

திருநாங்கூரில் ஒரே நேரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்த 11 பெருமாள்கள் - பக்தர்கள் பரவசம்

இங்கு ஆண்டுதோறும் தை அமாவாசைக்கு மறுநாள் உலக பிரசித்தி பெற்ற 11 தங்க கருடசேவை உத்ஸவம் நடைபெருவது வழக்கம். இந்த ஆண்டு கருட சேவை உத்ஸவம் இன்று அதிகாலை நடைபெற்றது. கருடசேவையை முன்னிட்டு முதல் நாள் நேற்று திருநகரி ஸ்ரீ கல்யாணரெங்கநாதர் கோயிலில் இருந்து திருமங்கை ஆழ்வார் புறப்பட்டு 11 திவ்ய தேசங்களுக்கு சென்று கருடசேவைக்கு வருமாறு பெருமாள்களை அழைக்கும் நிகழ்வு நடைபெற்றது. 

Bigg Boss 6 Tamil Runner: ’காலம் முழுவதும் போராடுவேன்..அறம் வெல்லும்...’ பிக்பாஸில் 2ஆம் இடம் பிடித்த விக்ரமன்!

திருநாங்கூரில் ஒரே நேரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்த 11 பெருமாள்கள் - பக்தர்கள் பரவசம்

அவரது அழைப்பை ஏற்று 11 பெருமாள்களும், தங்களது கோயில்களில் இருந்து புறப்பட்டு நாங்கூர் மணிமாடக்கோயிலில் நேற்று மாலை எழுந்தருளினர். அவர்களை திருமங்கையாழ்வார் வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் 11 பெருமாள்களும் கோயில் மண்டபத்தில் எழுந்தருள, சிறப்பு திருமஞ்சணம் நடைபெற்றது. தொடர்ந்து இன்று அதிகாலை  மணிக்கு மணிமாடக் கோயில், ராஜகோபுர வாயிலில் மணவாள மாமுணிகளும், ஹம்ஸவாகனத்தில் குமுதவள்ளி தாயாருடன் திருமங்கை ஆழ்வாரும் எழுந்தருளினர். 

Erode East By Election 2023: ஈரோடு கிழக்கு தொகுதிக்கான தேர்தல் பணிக்குழுவை அறிவித்தது திமுக

திருநாங்கூரில் ஒரே நேரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்த 11 பெருமாள்கள் - பக்தர்கள் பரவசம்

தொடர்ந்து அங்கு 11 பெருமாள்களும் ஒருவர் பின் ஒரு வராக தங்க கருடவாகனத்தில் எழுந்தருள, அவர்களுக்கு திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்யும் நிகழ்வு நடைபெற்று. பின்னர் கும்ப தீப ஆரத்தி எடுக்கப்பட்டு தங்க கருட சேவை உற்சவம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் திருமங்கை ஆழ்வார் அருளிய பாசுரங்களைப் பாடினர். தொடர்ந்து  11 பெருமாள்களும் தங்க கருட வாகனத்தில் வீதியுலாகாட்சி நடைபெற்றது. கருடசேவையில்  தமிழ்நாடு மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும்  பல்லாயிரக்கணக்கான  பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள்களை தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு திருவாங்கூர் சுற்றுவட்டார பகுதிகள்  முழுவதும் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் பா.அன்பரசன் செய்திருந்தார்

திருநாங்கூரில் ஒரே நேரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்த 11 பெருமாள்கள் - பக்தர்கள் பரவசம்

முன்னதாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா தலைமையிலான காவல்துறை பக்தர்களுக்கும், கோயிலில் சுவாமிகளை சுமக்கும் சீர்பாத தாங்கிகளை கோயிலுக்குள் அனுமதிக்காமல் தாக்கியுள்ளனர். இதனால் சாமியை தூக்க மாட்டோம் என அவர்கள் கூறியதால் கோயில் பரபரப்பு ஏற்பட்டது.  இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா சாமியை சுமக்கும் சீர்பாத தாங்கிகளிடம் நடந்த செயலுக்காக தான் வருத்தம் தெரிவிப்பதாக கையெடுத்து கும்பிட்டு வருத்தம் தெரிவித்தார் அதனைத் தொடர்ந்து சீர்பாத தாங்கிகள் சாமியை தூக்க சம்மதம். இதனால் சுவாமி புறப்பாடு நிகழ்வு வழக்கத்தை விட சுமார் 1 மணிநேரம் காலதாமதமாக நடைபெற்றது.மேலும் பக்தர்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget