மேலும் அறிய
Tokyo Olympics 2020 Opening Ceremony: மூவர்ணக் கொடி... முறுக்கேறிய நடை... டோக்கியோவில் கெத்து காட்டிய இந்தியா

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய அணி
1/8

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஒவ்வொரு நாடுகளிலும் மிகவும் குறைவான அளவிலான வீரர் மற்றும் வீராங்கனைகளே பங்கேற்றனர்.
2/8

ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக ஒவ்வொரு நாட்டிலும் ஒரு ஆண் வீரர் மற்றும் பெண் வீராங்கனை என இரண்டு பாலினத்தை சேர்ந்தவர்களும் கொடி பிடித்தனர்.
3/8

இந்தியா சார்பில் ஆடவர் ஹாக்கி அணியின் மன்பிரீத் சிங் மற்றும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இந்திய தேசிய கொடியை ஏந்தி சென்றனர்.
4/8

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா கோலகலாமாக இன்று நடைபெற்றது. இந்த விழாவில் அனைத்து நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.
5/8

இந்திய அணி ஈரான் நாட்டிற்கு அடுத்தப்படியாக 12ஆவது நாடாக தொடக்க விழாவில் வந்தது. இந்தியா சார்பில் 19 வீரர் வீராங்கனைகள் மற்றும் 6 அதிகாரிகள் தொடக்க விழாவில் பங்கேற்றனர்.
6/8

நான்காவது முறையாக ஒலிம்பிக் போட்டியில் களமிறங்கும் சரத் கமல் மற்றும் சானியா மிர்சா ஆகியோர் தொடக்க விழாவில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
7/8

அதேபோல சுதந்திர இந்தியாவில் ஒலிம்பிக் வரலாற்றில் தேசிய கொடியை ஏந்தி செல்லும் மூன்றாவது இந்திய பெண் என்ற பெருமையை மேரி கோம் பெற்றுள்ளார்.
8/8

இந்தியாவின் தேசிய கொடியை ஒலிம்பிக் போட்டியில் ஏந்தி செல்லும் 6ஆவது ஹாக்கி வீரர் என்ற பெருமையை மன்பிரீத் சிங் ஆவார். இதற்கு முன்பாக லால் சிங் போகாஹரி, மேஜர் தயான்சந்த், பல்பீர் சிங் சீனியர், ஷஃபர் இக்பால் மற்றும் பிரகாத் சிங் ஆகிய ஐந்து வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் தேசிய கொடியை ஏந்தி சென்றுள்ளனர்.
Published at : 23 Jul 2021 06:19 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion