மேலும் அறிய
HBD Ashwin: இந்திய கிரிக்கெட்டின் ஸ்பின் கிங் அஷ்வின் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆல்பம்

ரவிசந்திரன் அஷ்வின்
1/6

இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 10 ஆண்டுகளாக தவிர்க்க முடியாத ஒரு சுழற்பந்து வீச்சாளர் என்றால் அது ரவிச்சந்திரன் அஸ்வின் தான்.
2/6

சென்னையைச் சேர்ந்த அஸ்வின் 2010ல் ஒருநாள் அணியில் இடம்பிடித்தார். அதற்கு அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.
3/6

அன்று முதல் இன்று வரை இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்பின்னராக 10 ஆண்டுகளாக வலம் வருகிறார்.
4/6

இதுவரை 79 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள அஸ்வின் 413 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். அத்துடன் 111 ஒருநாள் போட்டிகளில் களமிறங்கி 150 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
5/6

மேலும் 46 டி20 போட்டிகளில் பங்கேற்று 52 விக்கெட் வீழ்த்தியுள்ளார். பந்துவீச்சு மட்டுமல்லாமல் டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங்கிலும் அசத்தியுள்ள அஸ்வின் இதுவரை 5 சதம் அடித்துள்ளார்.
6/6

கடைசியாக கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற போட்டியில் 5ஆவது சதத்தை அடித்து அசத்தினார்.
Published at : 17 Sep 2021 10:01 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
கிரிக்கெட்
இந்தியா
Advertisement
Advertisement