மேலும் அறிய
Super Six : சூப்பர் சிக்ஸ் போட்டியில் அசத்தி உலக கோப்பைக்குள் நுழைந்த நெதர்லாந்து அணி!
ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி பத்தாவது அணியாக உலக கோப்பைக்குள் நெதர்லாந்து அணி நுழைந்துள்ளது.
வெற்றி பெற்ற நெதர்லாந்து
1/6

நேற்று ஸ்காட்லாந்திற்கும் நெதர்லாந்திற்கும் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து ஸ்காட்லாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
2/6

முதலில் பேட்டிங் ஆடிய ஸ்காட்லாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான ஆட்டத்தை கொடுக்கவில்லை.
3/6

பின்னர் களமிறங்கிய பிராண்டன் மெக்முல்லென் அதிரடியாக ஆடி சதம் அடித்தார். 50 ஓவரில் ஸ்காட்லாந்து அணி 9 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்தது.
4/6

பின்னர் களமிறங்கிய நெதர்லாந்து 44 ஓவரில் 278 ரன்கள் எடுத்தால் மட்டுமே உலக கோப்பைக்கு தகுதி பெறும் என்ற கட்டாயத்திற்க்கு தள்ளப்பட்டது.
5/6

இதனால் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய நெதர்லாந்து அணி வீரர் பாஸ் டி லீட் சதம் அடித்தார். 42.3 ஓவரில் 278 ர்ன்கள் எடுத்து நெதர்லாந்து வெற்றி பெற்றது
6/6

இந்த வெற்றியின் மூலம் உலக கோப்பை போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து.
Published at : 07 Jul 2023 03:55 PM (IST)
மேலும் படிக்க





















