மேலும் அறிய
SL Vs IRE: அயர்லாந்து அணியை துவம்சம் செய்து சூப்பர் சிக்ஸ் சுற்றுக்குள் நுழைந்த இலங்கை அணி!
ஆரம்பம் முதலே அயர்லாந்து அணி இலங்கை பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தவித்தது. அனைத்து வீரர்களும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பியதால் அணியின் ரன்னும் அரவே ஏறவில்லை.

வெற்றி பெற்ற இலங்கை அணி
1/6

உலக கோப்பை போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டம் ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. நேற்று அயர்லாந்து அணி இலங்கை அணியுடன் மோதியது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் இலங்கையை பேட்டிங் செய்ய அழைத்தது.
2/6

முதலில் களம் இறங்கிய பதும் நிசங்க 20 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான திமுத் கருணாரத்னே சிறப்பாக ஆடினார். அவருடன் கைகோர்த்த சதீரா சமரவிக்ரமாவும் அதிரடியாக ஆடினார். இவர்களின் ஆட்டத்தால் ரன் குவிய தொடங்கின. திமுத் கருணாரத்னே சதம் அடித்து அவுட் ஆனார். சதீரா சமரவிக்ரமாவும் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
3/6

சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 325 ரன்கள் எடுத்தது இலங்கை அணி.
4/6

பின்னர் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கியது அயர்லாந்து அணி. ஆரம்பம் முதலே அயர்லாந்து அணி இலங்கை பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தவித்தது. அனைத்து வீரர்களும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பியதால் அணியின் ரன்னும் அரவே ஏறவில்லை.
5/6

சிறப்பாக பந்துவீசிய ஹசரங்கா தொடர்ந்து மூன்றாவது முறையாக ஐந்து விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.
6/6

இதனால் 31 ஓவரில் 133 ரன்கள் மட்டுமே அடித்து ஆல்-அவுட் ஆனது அயர்லாந்து அணி. இந்த வெற்றியின் மூலம் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னிறியது இலங்கை அணி.
Published at : 26 Jun 2023 03:21 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement