மேலும் அறிய
Mohammed Siraj : ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறிய முகமது சிராஜ்!
Mohammed Siraj : ஆசிய கோப்பையில் அதிரடியாக பந்து வீசி, ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி, ஐசிசி தரவரிசை பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருந்து சிராஜ் முதல் இடத்திற்கு முன்னேறினார்.

முகமது சிராஜ்
1/5

சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதியது. இதில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 50 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணிக்கு சொற்ப ரன்களையே இலக்காக வைத்தது.
2/5

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய வேக பந்துவீச்சாளர் பூம்ரா, முதல் விக்கெட்டை வீழ்த்தினார். பிறகு பந்து வீச வந்த முகமது சிராஜ் இலங்கை அணியின் பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார்.
3/5

ஒரே ஓவரில் நான்கு விக்கெட்களை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கையே மாற்றியமைத்தார். ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் முகமது சிராஜ் முன்னதாக நடைபெற்ற போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கு அதிக ரன்களை வாரி கொடுத்து பல விமர்சனங்களை பெற்றார். ஆனால், ஆசிய கோப்பையில் அதிரடியாக பந்து வீசி, ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
4/5

இதன் மூலம் ஐசிசி தரவரிசை பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருந்து சிராஜ் முதல் இடத்திற்கு முன்னேறினார். இவரின் இந்த அதிரடி பந்து வீச்சு உலகக் கோப்பை போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
5/5

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட சிராஜ் தனக்கு வழங்கப்பட்ட ஆறு லட்சம் பணத்தை இலங்கை மைதான ஊழியர்களுக்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
Published at : 21 Sep 2023 10:30 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement