மேலும் அறிய
TNPL 2023 : இறுதி போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அபார வெற்றி பெற்ற லைகா கோவை கிங்ஸ்!
TNPL 2023: நடப்பாண்டு சாம்பியனான லைகா கோவை கிங்ஸ் இந்த ஆண்டிலும் கோப்பையை தட்டி சென்றது.

2023 டிஎன்பிஎல் கோப்பையை வென்ற கோவை கிங்ஸ்
1/6

7 வது சீசன் டி.என்.பி.எல் இறுதிப்போட்டி நெல்லையில் நடந்தது. இந்த இறுதிப்போட்டியில் நெல்லை அணி நடப்பு சாம்பியன் கோவையை எதிர்கொண்டது. டாஸ் வென்ற கோவை முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
2/6

கோவை அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு 7 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்தவர்கள் நெல்லை அணியின் பந்துவீச்சை சிதரவிட்டனர்.
3/6

20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. இந்த இமாலய இலக்கை எட்டுவதற்கு நெல்லை அணியும் உதவியது.
4/6

கோவை அணி கொடுத்த பெரும்பாலான கேட்சை தவறவிட்டதால்தான் 205 ரன்கள் கோவை அணி எடுக்க மற்றொரு காரணம்
5/6

பின்னர் களமிறங்கிய நெல்லை அணி ஆரம்பம் முதலே தடுமாறியது. 15 ஓவர் மட்டுமே தாக்குபிடித்த நெல்லை 101 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
6/6

இதனால் 104 ரன்கள் வித்தியாசத்தில் கோவை அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்றது.
Published at : 13 Jul 2023 04:40 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement