மேலும் அறிய
Hardik Pandya : பாண்டியாவுக்கு என்னாச்சு? அவருக்கு பதில் இனி யார் களமிறங்க வாய்ப்புள்ளது?
பாண்டிய வரும் போட்டிகளில் விளையாடாவிட்டால் இந்திய அணிக்கு பெரும் இழப்பாக இருக்கும் என கிரிக்கெட் ரசிகர்கள் தங்களின் ஆதகங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

ஹர்திக் பாண்டியா
1/6

வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கில் அரைசதத்தையும் விராட் கோலி சதத்தையும் பதிவு செய்தனர்.
2/6

இந்நிலையில் 9 வது ஓவரை வீசிய இந்திய அணியின் ஆல் ரவுண்டர் பாண்டியா வங்கதேச அணி வீரர் லிட்டன் தாஸ் அடித்த பௌண்டரியை தடுத்தபோது இடது காலில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் சகித்துக்கொண்டு விளையாடிய பாண்டியாவால் நீண்ட நேரம் வலியை பொறுத்து கொள்ள முடியவில்லை.
3/6

மைதானத்தில் படுத்த பாண்டியாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின் மைதானத்தில் இருந்து வெளியே சென்றார். பாண்டியா வீசிய ஓவரில் மீதம் இருந்த மூன்று பந்துகளை இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் விராட் கோலி வீசினார்.
4/6

பாண்டியாவுக்கு மாற்று வீரராக சூர்யா குமார் யாதவ் கலத்திற்கு வந்தார். “பாண்டியாவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும் காயத்தின் ஆழம் இன்னும் சரியாகத்தெரியவில்லை.. ஸ்கேன் எடுத்த பிறகே அவருக்கு ஏற்பட்டிருக்கும் காயத்தின் வீரியம் தெரியவரும்” என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
5/6

ஒரு வேலை பாண்டியா அடுத்த போட்டியில் விளையாடாவிட்டால் அவருக்கு மாற்று வீரராக சூர்யா குமார் யாதவ் அல்லது ஆல் ரவுண்டர் அஸ்வின் விளையாட வாய்ப்பு அதிகமாக உள்ளது.
6/6

பாண்டிய வரும் போட்டிகளில் விளையாடாவிட்டால் இந்திய அணிக்கு பெரும் இழப்பாக இருக்கும் என கிரிக்கெட் ரசிகர்கள் தங்களின் ஆதகங்களையும் தெரிவித்து வருகின்றனர்
Published at : 20 Oct 2023 07:27 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement