By : ஐஷ்வர்யா சுதா | Updated at : 14 Aug 2021 08:59 PM (IST)
தலிபான்
1/7
ஆப்கானிஸ்தானில், அந்நாட்டு அரசுக்கும் தலிபான்களுக்கும் உள்நாட்டுப் போர் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
2/7
கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுவந்த அமெரிக்க ராணுவம் அங்கிருந்து சமீபத்தில் வெளியேறிவருகிறது.
3/7
வரும் ஆகஸ்ட் 30-ம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுவதுமாக வெளியேறிவிடும் என்று கூறப்பட்டிருக்கிறது. அமெரிக்கப் படைகள் வெளியேறுவதைத் தொடர்ந்து நிலைமை அங்கு மிக மோசமாக மாறிவருகிறது.
4/7
கடந்த சில தினங்களாக, தலிபான்கள் தங்களின் தாக்குதல்களை அதிகப்படுத்தி உள்ளனர்.
5/7
நேற்று முன் தினம் இரண்டு மாகாணங்களின் தலைநகரை தலிபான்கள் கைப்பற்றினர். தலைநகர் காபூல் போன்ற முக்கிய நகரங்களையும் தலிபான்கள் நெருங்கிவருகிறார்கள்.
6/7
இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரான காந்தகாரை தலிபான்கள் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
7/7
தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் பக்கத்தில், காந்தஹார் முற்றிலுமாக கைப்பற்றப்பட்டது. நகரத்தில் உள்ள தியாகிகள் சதுக்கத்தை, முஜாஹிதீன்கள் அடைந்துள்ளனர் என்று தெரிவித்திருந்தார்