மேலும் அறிய
Republic Day 2022 Tamil Nadu: சென்னை குடியரசு தின விழா: அணிவகுத்து வரும் தமிழ்நாடு அலங்கார ஊர்தி
குடியரசு தின அணிவகுப்பு
1/12

அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்! இந்தியா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ந் தேதியை குடியரசு நாளாக அனுசரிக்கின்றது.
2/12

இந்த வருடம் இந்தியா தனது 73வது குடியரசு தினத்தை அனுசரிக்கிறது.
3/12

குடியரசு தினக் கொண்டாட்டங்களின் முக்கிய அம்சமாகப் பார்க்கபடுவது டெல்லி ராஜப்பாட்டையில் இருந்து இந்தியா கேட் வரை செல்லும் வருடாந்திரப் பேரணிதான்.
4/12

இன்றைய தினத்தில் குடியரசுத் தலைவர் ராஜபாதையில் கொடியேற்றுவார். இந்தக் கொண்டாட்டத்தில் இந்திய பண்பாடு மற்றும் சமூக பாரம்பரியங்களின் அணிவகுப்பு, இந்திய ராணுவத்தின் வான் வெளி சாகசங்கள் ஆகியன இடம் பெறும்.
5/12

இதுதவிர இதே நாளில்தான் குடியரசுத் தலைவர் பத்மஸ்ரீ , பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகளை வழங்கி கௌரவிப்பார்.
6/12

வீர தீர செயல்களுக்கான பரம்வீர் சக்ரா விருது, அசோக சக்ரா விருது, வீர் சக்ரா விருது ஆகியவை வழங்கப்படும்.
7/12

தமிழக அரசு சார்பில் வேலு நாச்சியார், வ.உ.சி உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களை சித்தரிக்கும் வகையில் அலங்கார ஊர்திக்கான கருத்துரு வழங்கப்பட்டிருந்தது.
8/12

இந்த நிலையில், நடப்பாண்டிற்கான குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக ஊர்திகள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இதுதொடர்பாக, பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்
9/12

முதல் 3 சுற்றுகளில் தமிழ்நாடு ஊர்திகள் பரிசீலிக்கப்பட்டது. அடுத்தடுத்த சுற்றுகளில் உள்ள விதிகளின்படி தமிழ்நாடு ஊர்திகளை இந்த முறை ஏற்கமுடியவில்லை. கடந்த 2017, 19, 20,21 ஆம் ஆண்டுகளில் தமிழக ஊர்திகள் குடியரசுத் தின விழாவில் இடம்பெற்றதை நினைவூட்ட விரும்புகிறேன் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்
10/12

அதனை அடுத்து, டெல்லி குடியரசு தின விழாவில் நிராகரிக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி சென்னை குடியரசு தின விழாவில் இடம்பெறுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் அலங்கார ஊர்தி பயணப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்
11/12

டெல்லி குடியரசு தின விழாவில் புறக்கணிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் சென்னை குடியரசு நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளன. அணிவகுப்பு ஊர்திகளில் வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், பாரதியார்,வ.உ.சி, வீரபாண்டிய கட்டபொம்மன், வீரர் அழகு முத்துகோன் சிலைகள் இடம் பெற்றிந்தன. அதேபோல்,பெரியார், ராஜாஜி,காமராஜர்,பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உள்ளிட்டோரின் சிலைகளும் இருந்தது.
12/12

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்!
Published at : 26 Jan 2022 08:31 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















