மேலும் அறிய
Modi in Rameshwaram : ராமேஸ்வரம் அரிச்சல் முனையில் பிரதமர் மோடி!
Modi in Rameshwaram : ராமேஸ்வரத்தில் இருந்து தீர்த்த கலசங்களை எடுத்துக் கொண்டு, பிரதமர் மோடி நேற்று டெல்லி திரும்பினார்.

ராமேஸ்வரத்தில் மோடி (Photo Credits : PTI)
1/7

தமிழகத்திற்கான 3 நாள் பயணமாக பிரதமர் மோடி கடந்த வெள்ளியன்று மாலை சென்னை வந்தடைந்தார். தொடர்ந்து, ஆளுநர் ரவி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோருடன் சேர்ந்து, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். (Photo Credits : PTI)
2/7

பயணத்தின் இரண்டாவது நாளன்று திருச்சிக்கு சென்ற பிரதமர் மோடி, ஸ்ரீரங்கத்தில் உள்ள பிரபல ரங்கநாதசுவாமி ஆலயத்தில் வழிபாடு நடத்தினார். (Photo Credits : PTI)
3/7

தனது பயணத்தின் இறுதி அங்கமாக ராமேஸ்வரம் புறப்பட்டு சென்ற அவர், புன்னிய தீர்த்தங்களில் குளித்து அங்குள்ள ரங்கநாத சுவாமி ஆலயத்தில் இறைவழிபாடு நடத்தினார். தொடர்ந்து இன்றும் அவர் கோயிலில் வழிபாடு நடத்த உள்ளார். (Photo Credits : PTI)
4/7

வழிபாட்டை தொடர்ந்து நேற்று இரவு ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் பிரதமர் மோடி தங்கினார். (Photo Credits : PTI)
5/7

ராமேஸ்வரத்தில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு சென்று புனித நீராடினார். (Photo Credits : PTI)
6/7

அந்த வழியில் உள்ள கோதண்டராமர் கோயிலுக்கு காரில் சென்று தரிசனம் செய்தார். (Photo Credits : PTI)
7/7

இறுதியாக கலசத்தில் சேகரித்த 22 புனித தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு ராமேஸ்வரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மதுரைக்கு சென்ற மோடி, அங்கிருந்து விமானத்தில் டில்லி சென்றார். (Photo Credits : PTI)
Published at : 22 Jan 2024 12:22 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion