மேலும் அறிய
Rahul Gandhi Photos : அமிர்தசரஸ் பொற்கோயிலில் வழிபாடு செய்த ராகுல் காந்தி!
Rahul Gandhi Photos : பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள அமிர்தசரஸ் பொற்கோயிலில் சேவை செய்து வழிபாடு செய்துள்ளார் ராகுல் காந்தி.
அமிர்தசரஸ் பொற்கோயிலில் ராகுல் காந்தி
1/10

ஸ்ரீ ஹர்மந்தர் சாஹிப் என்று அழைக்கப்படும் அமிர்தசரஸ் பொற்கோயில், சீக்கிய மதத்தை பின்பற்றுபவர்களின் புனித ஸ்தலம் ஆகும்.
2/10

ஆண்டுதோறும் பல லட்ச மக்கள், இந்த கோயிலுக்கு வருகை தந்து வழிபாடு செய்கின்றனர்.எம்மதமும் இங்கு சம்மதமாக இருப்பதே இக்கோயிலின் சிறப்பு அம்சம்.
3/10

இக்கோயிலுக்கு வருபவர்களின் பசியை போக்க, சத்தான சைவ உணவு வழங்கப்படுகிறது. லங்கர் எனப்படும் சாப்பிடும் கூடத்தில், தினமும் சுமார் 50,000 நபர்களுக்கு சாப்பாடு வழங்கப்படுகிறது. கோயிலில் கொடுக்கப்படும் உணவும், அதன் பாத்திரங்களும் சுத்தமாக வைக்கப்பட்டு வருகிறது.
4/10

மனிதர்களுக்கு சேவை செய்வது கடவுளுக்கு சேவை செய்வதற்கு சமம் என்ற கோட்பாடை கொண்ட சீக்கிய மக்கள், உணவு சமைப்பது, உணவு பரிமாறுவது, பாத்திரம் விளக்குவது போன்ற வேலைகளை, அவர்களின் விருப்பப்படி செய்கிறார்கள்.
5/10

சமத்துவத்தை நிலைநாட்ட, ஏழை எளியோர் முதல் செல்வந்தர்கள் வரை அனைவரும் இந்த கோயிலில் சமமாக நடத்தப்படுகிறார்கள்.
6/10

அந்தவகையில், அரசியல் தலைவர்களும் இந்த கோயிலுக்கு வருவதுண்டு. தற்போது ராகுல் காந்தி வருகை தந்துள்ளார்.
7/10

அங்கு கொடுக்கப்படும் உணவையும் சாப்பிட்டுள்ளார்.
8/10

பொதுமக்களுடன் சேர்ந்து பாத்திரம் விளக்கியுள்ளார்.
9/10

இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ராகுல்.
10/10

“இன்று பொற்கோயிலான ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப்பிற்கு சென்று என் சேவையை தொடங்கினேன்.” என்று பதிவிட்டுள்ளார் ராகுல்.
Published at : 02 Oct 2023 04:01 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















