மேலும் அறிய
Michaung Cyclone Effects : மக்கள் செய்த தவறு..சென்னையில் தண்ணீர் தேங்க இதுவும் காரணம்!
Michaung Cyclone Effects : மிக்ஜாம் புயலால் பெய்த தொடர் மழையால் ஏற்பட்ட பாதிப்புக்கு முக்கிய காரணம் என்ன என்பதை பார்ப்போம்.

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகரம்
1/6

கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து திங்கட்கிழமை இரவு வரை தொடர்ந்து மழை பெய்து வந்தது.
2/6

இதனால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி, மக்களை திண்டாட வைத்தது. அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கடைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
3/6

சென்னை சூளைமேட்டில் உள்ள பெரியார் பாதையின் சாலைதான் இது..
4/6

வளசரவாக்கம் பகுதியில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி, வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
5/6

இரவு நேரத்தில் பயங்கரமாக காட்சியளிக்கும் மடிப்பாக்கம். பாம்பு உள்ளிட்ட உயிரினங்களும் வீட்டில் சூழ்ந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
6/6

தண்ணீர் வடிகால் கட்டமைப்பு சரியாக இல்லாத காரணத்தால், மழை நீர் தேங்கி உள்ளது என்பது பலரது குற்றச்சாட்டாக உள்ளது. ப்ளாஸ்டிக் குப்பைகளை அங்கங்கு வீசியதால், தண்ணீர் பூமிக்கு செல்ல இயலாத அவலநிலை ஏற்பட்டுள்ளதாக சற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற பேரிடர் வருவதற்கு மக்களாகிய நாமும், முக்கிய காரணம் என்பதே நிதர்சனமான உண்மை.
Published at : 05 Dec 2023 11:32 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement