மேலும் அறிய
Valentines Day: காதலர் தின கொண்டாட்டத்திற்கு தயாராகிடீங்களா? இதையெல்லாம் கவனிங்க!
Valentines Day 2024 : காதல் உறவு வலுவாக நீடிக்க இருவரும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருக்க வேண்டும். எந்த சூழல் வந்தாலும் உங்கள் காதல் உறவு நீடிக்க கீழே உள்ளவற்றை பின்பற்றினால் சிறப்பாக இருக்கும்.

காதலர் தினம்
1/6

உங்கள் காதல் துணையிடம் நீங்கள் எந்தளவு அன்பாக இருக்கிறார்களோ, அதைவிட நம்பிக்கையை அளியுங்கள். அப்போதுதான் உங்கள் காதல் துணை அவர்களது மகிழ்ச்சி மட்டுமின்றி, அவர்களது பிரச்சினைகளையும் உங்களிடம் நம்பிக்கையாக பகிர்வார்கள்.
2/6

அந்த சின்ன சின்ன பாராட்டு அவர்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை தரும். உங்கள் காதல் துணை ஏதாவது ஒன்றில் வெற்றி பெற்றால் அதை நினைத்து பெருமிதம் கொள்ளுங்கள்.
3/6

உங்கள் ஆசைகளை நீங்கள் திணிப்பது என்பது வேறு. அதனால், நம் காதல்துணைதானே, நம் கணவன்/மனைவி தானே என்று ஆசைகளை திணிக்காதீர்கள்.
4/6

காதலில் வார்த்தை பிரயோகம் என்பது மிக மிக முக்கியம் ஆகும். நம் கருத்தை சொல்லும்போது அவர்களது மனம் நோகாமல் அதை சொல்ல வேண்டும். அப்போதுதான், உங்கள் காதல் துணைக்கு உங்கள் மீது வெறுப்பு ஏற்படாது.
5/6

அவ்வாறு உங்கள் காதல் துணை யாரிடமும் பகிராத சில ரகசியங்களை உங்களிடம் பகிரும்போது, அதை கவனமாக காது கொடுத்து கேளுங்கள். அதை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் அழுதால் ஆறுதல் சொல்லுங்கள். நடந்ததை பற்றி எண்ண வேண்டாம். புதியதாக வாழ்வை தொடங்கலாம் என்று நம்பிக்கை அளியுங்கள்.
6/6

காதல் உறவை இன்னும் வலுப்படுத்த காதலர்களுக்குள் ஏதாவது சிக்கல் வந்தால் இருவரும் பேசி முடிவெடுங்கள். இருவரில் ஒருவர் மட்டும் முடிவெடுத்துவிட்டு பேசாதீர்கள். ஏனென்றால், இங்கு பேசி முடிவெடுக்காமல் முடிவு எடுத்துவிட்டு பேசுவதாலே பல உறவுகள் முறிவுகளில் முடிகிறது.
Published at : 13 Feb 2024 02:10 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
உலகம்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion