மேலும் அறிய
பட்டுப்புடவைகளை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டுமா? இதோ டிப்ஸ்!
பட்டுப்புடவைகளை எப்படி புதிதுபோல பராமரிக்க வேண்டும் என்பது பற்றிய டிப்ஸ்களை இங்கே காணலாம்.
![பட்டுப்புடவைகளை எப்படி புதிதுபோல பராமரிக்க வேண்டும் என்பது பற்றிய டிப்ஸ்களை இங்கே காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/18/af1e0e0342a3a1df075b0a9cbfca44fb1723984344062333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பட்டுப் புடவை பாரமரிப்பு குறிப்புகள்
1/6
![ஒவ்வொரு பட்டுப் புடவையும் ஒவ்வொரு முக் கிய தருணத்துக்காக வாங்கியது என்பதால் அவை மனதுக்கு நெருக்கமானவை. அந்த பட்டுப்புடவைகளை பாதுகாப்பது எப்படின்னு தெரிஞ்சிக்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/18/f3ccdd27d2000e3f9255a7e3e2c4880006179.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஒவ்வொரு பட்டுப் புடவையும் ஒவ்வொரு முக் கிய தருணத்துக்காக வாங்கியது என்பதால் அவை மனதுக்கு நெருக்கமானவை. அந்த பட்டுப்புடவைகளை பாதுகாப்பது எப்படின்னு தெரிஞ்சிக்கலாம்.
2/6
![பட்டுப் புடவை வெளிப்பார்வைக்கு சுத்தமாக தெரிந்தாலும், அதில் கண்ணுக்குத் தெரியாத கறைகள் அல்லது அழுக்குகள் இருக்கலாம். அவை காலப்போக்கில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்நிலையில் பட்டுப் புடவைகளை சுத்தம் செய்ய டிரை கிளீனிங் சிறந்த வழியாகும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/18/156005c5baf40ff51a327f1c34f2975b51922.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பட்டுப் புடவை வெளிப்பார்வைக்கு சுத்தமாக தெரிந்தாலும், அதில் கண்ணுக்குத் தெரியாத கறைகள் அல்லது அழுக்குகள் இருக்கலாம். அவை காலப்போக்கில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்நிலையில் பட்டுப் புடவைகளை சுத்தம் செய்ய டிரை கிளீனிங் சிறந்த வழியாகும்.
3/6
![பட்டுப் புடவையை மஸ்லின் துணியால் போர்த்தி பாதுகாக்கலாம். மஸ்லின் ஒரு மென் மையான துணியாகும். இது பட்டுப் புடவையை தூசி, வெளிச்சத்தில் இருந்து பாதுகாக்கிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/18/799bad5a3b514f096e69bbc4a7896cd9f8846.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பட்டுப் புடவையை மஸ்லின் துணியால் போர்த்தி பாதுகாக்கலாம். மஸ்லின் ஒரு மென் மையான துணியாகும். இது பட்டுப் புடவையை தூசி, வெளிச்சத்தில் இருந்து பாதுகாக்கிறது.
4/6
![ஆனால் பட்டுப் புடவைகளை சேர்த்துவைக்க பிளாஸ்டிக் கவர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். காரணம் அவை ஈரப்பதத்தை தக்கவைத்து பூஞ்சைக் காளானை ஏற்படுத்தும். பட்டுப் புடவைகளை குளுமையான, உலர்ந்த இடத்தில் சேமித்து வைக்கவும். அதிக ஈரப்பதம் அல்லது நேரடி சூரிய வெளிச்சம் படும் பகுதி களை தவிர்க்கவும். அதிக வெப்பமும், ஈரப்பத மும் பட்டு இழைகளை வலுவிழக்கச் செய்து, நிறங்களை மங்கச் செய்யும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/18/d0096ec6c83575373e3a21d129ff8fef89899.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆனால் பட்டுப் புடவைகளை சேர்த்துவைக்க பிளாஸ்டிக் கவர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். காரணம் அவை ஈரப்பதத்தை தக்கவைத்து பூஞ்சைக் காளானை ஏற்படுத்தும். பட்டுப் புடவைகளை குளுமையான, உலர்ந்த இடத்தில் சேமித்து வைக்கவும். அதிக ஈரப்பதம் அல்லது நேரடி சூரிய வெளிச்சம் படும் பகுதி களை தவிர்க்கவும். அதிக வெப்பமும், ஈரப்பத மும் பட்டு இழைகளை வலுவிழக்கச் செய்து, நிறங்களை மங்கச் செய்யும்.
5/6
![சில மாதங்களுக்கு ஒருமுறை பட்டுப் புடவை களை விரித்து, மீண்டும் மடியுங்கள். இது நிரந்தர மடிப்புகள் உருவாவதை தடுக்கிறது. மீண்டும் மடிக்கும் போது, துணியின் குறிப்பிட்ட பகுதி களில் அழுத்தத்தைத் தவிர்க்க மடிப்புக் கோடுகளை மாற்றவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/18/032b2cc936860b03048302d991c3498f0cf72.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சில மாதங்களுக்கு ஒருமுறை பட்டுப் புடவை களை விரித்து, மீண்டும் மடியுங்கள். இது நிரந்தர மடிப்புகள் உருவாவதை தடுக்கிறது. மீண்டும் மடிக்கும் போது, துணியின் குறிப்பிட்ட பகுதி களில் அழுத்தத்தைத் தவிர்க்க மடிப்புக் கோடுகளை மாற்றவும்.
6/6
![பட்டுப் புடவையில் நேரடியாக வாசனை திரவியங்கள் அல்லது பிற ரசாயனங்களை தெளிக்க வேண்டாம். அவை கறை களை ஏற்படுத்தும், காலப்போக்கில் துணியை பலவீனப்படுத் தும். பட்டுப் புடவையை அணிவதற்கு முன்பு மட்டும் வாசனை திரவியங்களைப் பயன்படுத்துங்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/18/18e2999891374a475d0687ca9f989d8384ce2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பட்டுப் புடவையில் நேரடியாக வாசனை திரவியங்கள் அல்லது பிற ரசாயனங்களை தெளிக்க வேண்டாம். அவை கறை களை ஏற்படுத்தும், காலப்போக்கில் துணியை பலவீனப்படுத் தும். பட்டுப் புடவையை அணிவதற்கு முன்பு மட்டும் வாசனை திரவியங்களைப் பயன்படுத்துங்கள்.
Published at : 18 Aug 2024 06:15 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion