மேலும் அறிய
Cauliflower Chilli :காலிஃப்ளவர் சில்லி ...இந்த மாதிரி செய்து பாருங்க.!
சுவையான காலிஃப்ளவர் சில்லி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

காலிஃப்ளவர் சில்லி
1/6

முதலில் காலிபிளவரை தண்டு பகுதிகளோடு வெட்டி சுடுதண்ணீரில் போட்டு, 7 செகண்டில் சுடு தண்ணீரில் இருந்து வெளியே எடுத்து விட வேண்டும். காம்பு இல்லாமல் காலிஃப்ளவரை சில்லி போட்டாலும் காலிபிளவர் சில்லி சரியாக வராது.
2/6

சுடுதண்ணீரில் இருந்து எடுத்த காலிஃப்ளவரை தண்ணீரை வடித்து விட்டு ஒரு அகலமான பெளலில் போட்டுக் கொள்ள வேண்டும்.
3/6

இதில் தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், சில்லி சிக்கன் 65 பவுடர், பஜ்ஜி மாவு எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை சேர்த்து, நன்றாக பாத்திரத்தை குலுக்கி விட வேண்டும்.
4/6

மாவு காலிஃப்ளவரில் ஒட்டாததுபோலவே தெரியும். ஆனாலும் இந்த இடத்தில் தண்ணீர் தெளித்து மசாலாக்களை காலிபிளவரோடு ஒட்ட வைக்க கூடாது. 2 நிமிடங்கள் நன்றாக குலுக்கி விட்டு, ஒரு மூடி போட்டு 5 நிமிடங்கள் அப்படியே வைத்து விட வேண்டும்.
5/6

உங்கள் கைகளைக் கொண்டு காலிபிளவர் உடையாமல் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து பிசையும் போது, மசாலாக்கள் காலிபிளவரோடு நன்றாக ஒட்டிக் கொள்ளும்.
6/6

இறுதியாக இந்த காலிஃப்ளவரில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றி, நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். காலிபிளவரில் எண்ணெய் சேர்த்து செய்யும் போது காலிபிளவர் மொறுமொறுவென வரும்.
Published at : 27 Nov 2023 06:41 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement