மேலும் அறிய
Oil Bathing : வாரத்தில் எத்தனை முறை எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்?
Oil Bathing : உடல் உஷ்ணத்தை குறைக்கும் எண்ணெய் குளியலை வாரத்தில் எத்தனை முறை செய்ய வேண்டும் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்

எண்ணெய் குளியல்
1/6

ஆண்களாக இருந்தால் புதன், சனி அதே பெண்களாக இருந்தால் செவ்வாய், வெள்ளி இந்த இரண்டு நாட்களில் ஏதேனும் ஒரு நாட்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.
2/6

குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு அசைவம் சாப்பிட்டால் காய்ச்சல், ஜலதோஷம், சளி பிடிக்கலாம் என சொல்லப்படுகிறது.
3/6

குழந்தைகள், சிறியவர்கள், பெரியவர்கள் யாராக இருப்பினும் பச்சை எண்ணெயில் குளிக்க கூடாது. எண்ணெயை நன்கு காய்ச்சி ஆற வைத்த பிறகே தேய்த்து குளிக்க வேண்டும்.
4/6

காலையில் வெயில் வருவதற்கு முன்பே குளிக்க வேண்டும். மாலையில் வெயில் தாழ்ந்த பிறகு குளிக்க வேண்டும். மாலையில் 6 மணிக்கு மேல் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது.
5/6

உள்ளங்கை அளவிற்கு மட்டுமே எண்ணெய் எடுத்து உச்சந்தலையில் தடவி குளிப்பதே போதுமானது. உடல் உஷ்ணம் இருப்பவர்கள் சிறிதளவு எண்ணையை அடி வயிற்றில் தேய்த்து குளிக்கலாம்.
6/6

எண்ணெயை உடலில் தேய்த்த பிறகு ஒரு நாழிகை மட்டுமே, அது உடம்பில் இருக்க வேண்டும். அதாவது 24 நிமிடத்திற்குள் குளிக்க வேண்டும். எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது கட்டாயம் வெந்நீரில்தான் குளிக்க வேண்டும்.
Published at : 05 Jun 2024 11:31 AM (IST)
Tags :
Lifestyle Tipsமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion