மேலும் அறிய
Ragi Cake Recipe : ராகியில் மிருதுவான கேக் ரெசிபி...இப்படி செய்து அசத்துங்கள்!
Ragi Cake Recipe : ஓவன் இல்லாமல், ஆரோக்கியமான ராகி கேக்கை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

கேழ்வரகு கேக்
1/6

4 சிறிய அளவிலான கிண்ணங்களை எடுத்துக் கொள்ளவும். இப்போது இந்த கிண்ணங்களின் உட்பகுதியில் எண்ணெய் தடவி இதனுள் கேழ்வரகு மாவை பரவலாக தூவி விட்டுக் கொள்ள வேண்டும்.
2/6

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் வெல்லம், இரண்டு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து வெல்லம் உருகும் வரை கரண்டியால் கிளறி விட வேண்டும். உருகியதும், இந்த வெல்ல கரைசலை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இதனுடன் அரை கப் ரீஃபைண்ட் செய்யப்பட்ட எண்ணெய் அரை கப் அதிகம் புளிக்காத தயிர் ஆகியவற்றை சேர்த்து நன்கு beat செய்துக் கொள்ள வேண்டும்.
3/6

இப்போது ஒரு கப் கேழ்வரகு மாவு, ஒரு கப் கோதுமை மாவு, 3 ஸ்பூன் கோக்கோ பவுடர் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா, 2 சிட்டிகை உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, சலித்து வெல்ல கரைசலுடன் சேர்த்து இதை நன்றாக beat செய்து கொள்ள வேண்டும். பின் இதனுடன் அரை கப் பால் சேர்த்து மீண்டும் beat செய்துக் கொள்ள வேண்டும்.
4/6

இந்த கலவை இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் மேலும் சிறிது பால் சேர்த்து மாவை கலந்து, ஒரு ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலந்து விட்டுக் கொள்ளவும்.
5/6

இப்போது ஏற்கனவே எண்ணெய் தடவி மாவு தூவி வைத்துள்ள கிண்ணங்களை எடுத்து அதில் இந்த கலவையை பாதியளவு மட்டும் நிரப்ப வேண்டும். இப்போது அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதனுள் கம்பி ஸ்டாண்டு வைத்து அதன் மேல் ஒரு தட்டு போட்டு மூடி 5 நிமிடம் சூடுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
6/6

பின்னர் மூடியை திறந்து உள்ளே வைத்துள்ள தட்டின் மீது நாம் கலவை நிரப்பி வைத்துள்ள கிண்ணங்களை வைக்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் 35 நிமிடம் வேக வைத்து இறக்கி கொள்ளவும். பின் கேக் ஆறியதும் கத்தியால் ஓரங்களை வெட்டி விட்டு கேக்கை கிண்ணத்தில் இருந்து எடுத்துக் கொள்ளவும்.
Published at : 03 May 2024 04:20 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சேலம்
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion