மேலும் அறிய
Nethili Meen Kulambu : கிராமத்து ஸ்டைலில் நெத்திலி மீன் குழம்பு ரெசிபி இதோ!
Nethili Meen Kulambu : மீன் குழம்பு என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதுவும் கிராமத்து ஸ்டைலில் நெத்திலி மீன் குழம்பு என்றால் கேட்கவே தேவையில்லை.

நெத்திலி மீன் குழம்பு
1/6

தேவையான பொருட்கள் : துருவிய தேங்காய் - 1/2 கப், சீரகம் - 1/2 தேக்கரண்டி , நெத்திலி மீன் 1 கிலோ, தேங்காய் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி , கடுகு - 1 தேக்கரண்டி , வெந்தயம் - 1/4 தேக்கரண்டி, சிறிய வெங்காயம் - 1 கப் , பச்சை மிளகாய் - 2 , இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி , தக்காளி - 1 , மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி, மல்லித்தூள் - 1 தேக்கரண்டி, புளிக்கரைசல் - 1/2 கப், கறிவேப்பிலை, தண்ணீர், தேவையான அளவு உப்பு
2/6

செய்முறை : முதலில் துருவிய தேங்காய், சீரகம், தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்தது ஒரு மண் சட்டியில் தேங்காய் எண்ணெய் சூடேற்றிய பிறகு கடுகு, வெந்தயம், சிறிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்
3/6

வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
4/6

அதன் பின் புளிக்கரைசல், தேவையான அளவு தண்ணீர், அரைத்த தேங்காய் மசாலா விழுது, கறிவேப்பிலை சேர்த்து மூடிய நிலையில் பத்து நிமிடத்திற்கு கொதிக்க விடவும்.
5/6

குழம்பு கொதித்த பிறகு, சுத்தம் செய்த நெத்திலி மீனை சேர்த்து கரடியைவைத்து மீன் உடையாமல் பக்குவமாக கிளறிவிடவும்.
6/6

அதன் பின் ஐந்து நிமிடத்திற்கு மீன் குழம்பை மூடிய நிலையில் மிதமான சூட்டில் கொதிக்கவிடவும். 5 நிமிடத்திற்கு பிறகு அடுப்பில் இருந்து இறக்கினால் சுவையான நெத்திலி மீன் குழம்பு தயார்.
Published at : 11 Jun 2024 11:32 AM (IST)
Tags :
South Indian Recipesமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion