மேலும் அறிய
Mango pudding Recipe:சுவையான மாம்பழ புட்டிங்..ஜில்லுன்னு ஃப்ரிஜ்ஜில் வைத்து சாப்பிடுங்க! ரெசிபி இதோ!
Mango pudding Recipe: சுவையான ஜில்லென்ற மாம்பழ புட்டிங் எப்படி செய்வது என்று காணலாம்.

மாம்பழம்
1/5

மாம்பழம் பிடிக்கும் என்பவர்கள் புட்டிங் செய்து சாப்பிடலாம். மாம்பழம் எல்லாருக்கும் மிகவும் பிடித்த ஒன்று.
2/5

தேவையான பொருட்கள் மாம்பழம் - 4 சர்க்கரை - 1/4 கப் தண்ணீர் - 1/2 கப் சீனா கிராஸ் - 5 கிராம் கிரீம் - 1/2 கப் பால் - 1/4 கப்
3/5

முதலில் மாம்பழங்களை எடுத்து கழுவிக்கொண்டு அதன் தோல்களை நீக்க வேண்டும். அதன் பின்பு மாம்பழங்களை சிறிய துண்டுகளாக வெட்டி மிக்ஸில் சேர்த்து அதனுடன் சர்க்கரை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்
4/5

அரைத்த மாம்பழங்களை ஒரு கடாயில் வடிகட்டி அதை சிறிது நேரம் வேகவைக்கவும் மற்றோரு பாத்திரத்தில் சைனா கிராஸ் மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக்கொள்ளவும்
5/5

இந்த கரைத்த சைனா கிராஸை வேகவைத்த மாம்பழ கலவையில் சேர்த்து நன்கு கலக்கவும் அடுத்து இந்த மாம்பழ கலவையில் ப்ரெஷ் கிரீம் மற்றும் பால் சேர்த்து கலக்கவும் தயாரான மாம்பழ கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி காற்று புகாதவாறு பிரிட்ஜ்ல் வைத்து எட்டு மணி நேரம் ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கவும்.
Published at : 09 Oct 2024 10:44 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement