மேலும் அறிய
ரவா லட்டை இப்படி செய்து பாருங்க..சுவை சூப்பராக இருக்கும்!
Rava Laddu : பாரம்பரிய இனிப்பு வகையான ரவா லட்டை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

ரவா லட்டு
1/5

தேவையான பொருட்கள் : வெள்ளை ரவை - 2 கப், சர்க்கரை - 1 1/2 கப், ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி, பால் - 1/4 கப், முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை, நெய்
2/5

செய்முறை : அடுப்பில் கடாயினை வைத்து நெய் ஊற்றி, முந்திரி மற்றும் திராட்சையை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
3/5

அதே கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி ரவையை பொன்னிறமாக வறுத்து கொள்ளவும். அடுத்தது தேவையான அளவு சர்க்கரையை பொடியாக அரைத்து கொள்ளவும்.அதன்பின், பொடி சர்க்கரையுடன் ரவையையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
4/5

அரைத்த ரவையுடன், ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி பருப்பு, வறுத்த உலர் திராட்சை, நெய் சிறிதளவு, தேவையான அளவு பால் சேர்த்து கெட்டியான பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
5/5

அந்த கலவையை லட்டு போல உருண்டை பிடித்து சிறிது நேரம் உலர வைத்தால் சுவையான ரவா லட்டு தயார்.
Published at : 30 May 2024 12:05 PM (IST)
Tags :
Sweets Recipeமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement