மேலும் அறிய
Palakk Paneer Pulao: பாலக் கீரையில் சுவையான பனீர் புலாவ் செய்வது எப்படி?
Palakk Paneer Pulao: சாதாரண புலாவ் செய்து போர் அடித்து விட்டதா? அப்போ ஒரு முறை பாலக் கீரையில் பனீர் புலாவ் செய்து பாருங்க சுவை அட்டகாசமா இருக்கும்
![Palakk Paneer Pulao: சாதாரண புலாவ் செய்து போர் அடித்து விட்டதா? அப்போ ஒரு முறை பாலக் கீரையில் பனீர் புலாவ் செய்து பாருங்க சுவை அட்டகாசமா இருக்கும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/27/20d2996e4fa542de56005e67ea5e80731722064226755501_original.png?impolicy=abp_cdn&imwidth=720)
பாலக் பனீர் புலாவ்
1/6
![தேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி 200 கிராம், பாலக் கீரை ஒரு கட்டு, 3 நறுக்கிய வெங்காயம் , 3 நறுக்கப்பட்ட தக்காளி, 10 பச்சை மிளகாய், 2 பூண்டு, பனீர் 600 கிராம், 5 மேஜை கரண்டி சோள மாவு , 1/2 தேக்கரண்டி மிளகு தூள், உப்பு , 2 தேக்கரண்டி பெருஞ்சீரகம், 6 இலவங்கப்பட்டை, 6 கிராம்பு, 1 பெரிய ஏலக்காய், 50 கிராம் முந்திரி பருப்பு, 1/2 தேக்கரண்டி முழு மிளகு, 200 மில்லி எண்ணெய் , 3 டீஸ்பூன் நெய்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/27/4e85b0fee00845661fedf3141b8726884fbdc.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி 200 கிராம், பாலக் கீரை ஒரு கட்டு, 3 நறுக்கிய வெங்காயம் , 3 நறுக்கப்பட்ட தக்காளி, 10 பச்சை மிளகாய், 2 பூண்டு, பனீர் 600 கிராம், 5 மேஜை கரண்டி சோள மாவு , 1/2 தேக்கரண்டி மிளகு தூள், உப்பு , 2 தேக்கரண்டி பெருஞ்சீரகம், 6 இலவங்கப்பட்டை, 6 கிராம்பு, 1 பெரிய ஏலக்காய், 50 கிராம் முந்திரி பருப்பு, 1/2 தேக்கரண்டி முழு மிளகு, 200 மில்லி எண்ணெய் , 3 டீஸ்பூன் நெய்.
2/6
![செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் சோள மாவு, மிளகு தூள், உப்பு சேர்த்து மிக்ஸ் செய்து அதில் பனீரை பிரட்டி எண்ணெயில் பொரித்து எடுத்துக்கொள்ளவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/27/a29d83d63a9d39c1c3e36c8362480fee701cd.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் சோள மாவு, மிளகு தூள், உப்பு சேர்த்து மிக்ஸ் செய்து அதில் பனீரை பிரட்டி எண்ணெயில் பொரித்து எடுத்துக்கொள்ளவும்.
3/6
![அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அதன் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/27/6a349379e3a88d96cd2169bf62845058bce58.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அதன் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
4/6
![அடுத்தது இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து பச்சை மனம் நீங்கும் வரை வதக்கவும். அதன் பிறகு பாலக் கீரை சேர்த்து நன்கு வதக்கவும். கீரை வதங்கியதும், வறுத்து வைத்துள்ள பன்னீர் சேர்த்து கிளறிவிடவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/27/f178d8708d572390d446bca2373512705b52d.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அடுத்தது இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து பச்சை மனம் நீங்கும் வரை வதக்கவும். அதன் பிறகு பாலக் கீரை சேர்த்து நன்கு வதக்கவும். கீரை வதங்கியதும், வறுத்து வைத்துள்ள பன்னீர் சேர்த்து கிளறிவிடவும்.
5/6
![அடுத்தது தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி மூடிவைத்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். அதன் பிறகு பஸ்மதி அரிசியை சேர்த்து 10 நிமிடம் மூடிய நிலையில் வேகவைக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/27/bcddfb81f63fed17d48b8b4028b750223c076.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அடுத்தது தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி மூடிவைத்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். அதன் பிறகு பஸ்மதி அரிசியை சேர்த்து 10 நிமிடம் மூடிய நிலையில் வேகவைக்கவும்.
6/6
![வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் நெய் சேர்த்து கிளறிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கிவும். அடுத்தது புலாவ் பாத்திரத்தை தோசை கல்லில் 25 நிமிடம் வைத்து இறக்கினால் சுவையான பாலக் புலாவ் தயார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/27/1150b2f38516dc608832ec007bbb9ed49ca2c.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் நெய் சேர்த்து கிளறிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கிவும். அடுத்தது புலாவ் பாத்திரத்தை தோசை கல்லில் 25 நிமிடம் வைத்து இறக்கினால் சுவையான பாலக் புலாவ் தயார்.
Published at : 27 Jul 2024 01:14 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion