மேலும் அறிய
Protein Shake: ஆரோக்கியமான புரோட்டீன் ஷேக் ரெசிபி இதோ!
Protein Shake: ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் வரிசையில் புரோட்டீன் மிலக்ஷேக் எப்படி செய்வது என்பதை காணலாம்.

புரோட்டீன் ஷேக்
1/5

காலை உணவோடு அல்லது நண்பகல் வேளையில் பிரேக் நேரத்தில் ஏதாவது ஸ்நாக், ஜூஸ் குடிக்க வேண்டும் என்றால் புரோட்டீன் நிறைந்த ஷேக் குடிக்கலாம். இது ஊட்டச்சத்து நிறைந்ததும் கூட.
2/5

என்னென்ன தேவை? - முழு பொட்டுக் கடலை - 1/2 கப், ஊறவைத்த பாதாம் - 20, வாழைப்பழம் - 1, பேரீச்சம்பழம் -6. ஆறவைத்த பால் - 2 1/2 கப்
3/5

பாதாம் பருப்பை எடுத்து தண்ணீரில் ஊறவைத்து தோலை நீக்கி ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.ஒரு மிக்சர் ஜாரில் முழு பொட்டு கடலை மற்றும் ஊறவைத்த பாதாம் சேர்த்து நன்றாக பொடியாக அரைக்கவும்.
4/5

ஒரு பிளெண்டரில், நறுக்கிய வாழைப்பழம், விதை நீக்கிய பேரீச்சம்பழம், அரைத்த பொட்டு கடலை பாதாம் பவுடர், காய்ச்சி ஆறவைத்த பால் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.
5/5

குடிக்கும் மில்க்ஷேக் பதத்தை பெற மற்றொரு கப் பால் சேர்க்கவும். மீண்டும் அனைத்தையும் கலக்கவும். ஒரு கிளாஸில் பானத்தை ஊற்றி, நறுக்கிய வாழைப்பழங்கள் மற்றும் நறுக்கிய பிஸ்தா மற்றும் பாதாம் கொண்டு அலங்கரிக்கவும். ஆரோக்யமான புரோட்டீன் மில்க் ஷேக் தயார்.
Published at : 07 Oct 2024 03:51 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement