மேலும் அறிய
Pattani Masala : தாபா ஸ்டைல் பட்டாணி குருமா செய்வது எப்படி?
Pattani Masala : இந்த பட்டாணி குருமாவை சப்பாத்தி, பூரி, ரொட்டியுடன் சைடிஷாக வைத்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்

பட்டாணி குருமா
1/6

தேவையான பொருட்கள் : பச்சை பட்டாணி - 1 கப், மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, காஷ்மீரி சில்லி பவுடர் - 2 தேக்கரண்டி, உப்பு - 1 தேக்கரண்டி, தக்காளி - 4 , சர்க்கரை - 1 தேக்கரண்டி, கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி, கசூரி மேத்தி, பச்சை மிளகாய் - 4 , பூண்டு - 6 பற்கள், இஞ்சி, வெங்காயம் - 2 , முந்திரி பருப்பு - 10 எண்ணெய், இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய் & கல் பாசி, வெங்காயம் - 1 .
2/6

செய்முறை: முதலில் மிக்ஸியில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து பேஸ்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து பேஸ்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
3/6

அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் , கடல் பாசி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
4/6

அடுத்தது வெங்காயம் சேர்த்து பொன்னியமாக வதக்கவும். அதன் பின் அரைத்த பச்சை மிளகாய் விழுதை சேர்த்து வதக்கவும். அதன் பின் பச்சை பட்டாணியை சேர்க்கவும்.
5/6

பட்டாணியில் பச்சை வாசம் நீங்கியதும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறிவிடவும். அதன்பின் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து கிளறிவிடவும். அதன்பின் தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் மூடி வைத்து வேகவிடவும்.
6/6

அடுத்தது ஒரு டீஸ்பூன் சர்க்கரை, கரம் மசாலா, அரைத்த வெங்காயம் முந்திரி பேஸ்டை சேர்த்து கிளறிவிடவும். அதன்பின் சிறிதளவு தண்ணீர் ஊற்றி 2 நிமிடம் வேகவைத்து கசூரி மேத்தி தூவி இறக்கினால் சுவையான தாபா ஸ்டைல் பட்டாணி குருமா தயார்
Published at : 21 Aug 2024 01:02 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion