மேலும் அறிய
Beetroot Carrot Soup: ஹெல்தியான பீட்ரூட் கேரட் சூப் ரெசிபி இதோ!
Beetroot Carrot Soup: சூப் வகைகள் ஆரோக்கியமாமவை. பீட்ரூட் கேரட் சூப் செய்வது எப்படி என்று காணலாம். ஸ்நாக்ஸ் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் இதை செய்யலாம்.

பீட்ரூட் கேரட் சூப்
1/6

கடாயில் வெண்ணெய் சேர்த்து அதில் பட்டை, பிரியாணி இலை சேர்க்கவும்.
2/6

நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். நறுக்கிய கேரட் மற்றும் பீட்ரூட் சேர்த்து வதக்கவும்.
3/6

உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்துவிடவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து கடாயை மூடி 20 நிமிடம் வேகவிடவும்.
4/6

நன்கு ஆறவிட்டு பட்டை, பிரியாணி இலை இன்றி விழுதாக அரைக்கவும். கடாயில் ஊற்றி அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து பேசில் இலை சேர்த்து கலந்து 5 நிமிடம் குறைந்த தீயில் வேகவிடவும்.
5/6

சுவையான கேரட் பீட்ரூட் சூப் தயார். கடாயில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய பிரட் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
6/6

கடைசியாக கேரட் பீட்ரூட் சூப்பில் வறுத்த பிரட் துண்டுகளை சேர்த்து பரிமாறவும்.
Published at : 26 May 2024 03:12 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement