மேலும் அறிய
Curly Hair : நித்யா மேனன், அனுபமா போல் சுருட்டை முடி வேண்டுமா? பராமரிப்பு டிப்ஸ் இதோ!
Curly Hair : சுருட்டை முடியை ஒழுங்காக பராமரித்தால் வானத்தில் இருந்து இறங்கி வந்த தேவதை போல் இருப்பீர்கள்.

நித்யா மேனன் - அனுபமா
1/6

சுருட்டை முடியானது நேரான முடியை விட சீக்கிரமாக வறண்டு விடும். அதனால் சுருட்டை முடிக்கென வடிவமைக்கப்பட்ட கண்டிஷனர், சீரம் அல்லது ஜெல்லை பயன்படுத்தினால் முடியை நீரோட்டமாக வைக்கலாம்
2/6

சுருட்டை முடி உடையவர்கள் அடிக்கடி முடியை அலசுவது முடி உதிர்தலை ஏற்படுத்தலாம். அதனால் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை மட்டும் தலை குளிக்கவும். குளிக்கும் முன் தலைக்கு எண்ணெய் மசாஜ் செய்யலாம். இல்லையென்றால் வீட்டிலே ஹேர் மாஸ்க் தயாரித்து பயன்படுத்தலாம்.
3/6

சுருட்டை முடியில் அதிக சிக்கு இருக்கும் அதனால் நெருங்கிய பல் கொண்ட சீப்பை பயன்படுத்தினால் முடிக்கு பாதிப்பு ஏற்படலாம். இதனை தவிர்க்க குளித்த உடன் முடியை வீரல்களால் பிரித்து விட்டு அகலமான பல் கொண்ட சீப்பால் தலை சீவலாம். நன்றாக காய்ந்த முடியில் சீப்பு பயன்படுத்தினால் முடியானது பஞ்சு மிட்டாய் போல் ஆகிவிடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
4/6

முடியை சுருளாக்க வெப்பம் சார்ந்த ஸ்டைலிங் கருவிகளை தவிர்க்க வேண்டும். இதனை அடிக்கடி பயன்படுத்தினால் முடி சேதமடையும்
5/6

சுருட்டை முடியை பராமரிக்க 12 வாரங்களுக்கு ஒரு முறை முடியை டிரிம் செய்வது அவசியம். இது வெடிப்புகளை போக்கி முடி உடைவதை தடுக்கலாம்
6/6

சுருட்டை முடி உள்ளவர்கள் தூங்கும் முன் தலையை சில்க் அல்லது சாட்டின் துணியில் சுற்றி தூங்கவும்.அதற்கென்று முடியை இறுக்கி கட்ட வேண்டாம். இப்படி செய்தால் அடுத்த நாளும் முடி நன்றாக இருக்கும்.
Published at : 20 Aug 2024 10:54 AM (IST)
Tags :
Lifestyle Tipsமேலும் படிக்க
Advertisement
Advertisement