மேலும் அறிய
Cauliflower 65: ஸ்நாக்ஸ் சாப்பிடனும் போல இருக்கா? சுவையான காலிஃப்ளவர் 65 ரெசிபி!
ஞாயிற்றுக்கிழமையான இன்று அசைவ சுவையில் காலிஃப்ளவர் 65 எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

காலிஃப்ளவர் 65
1/6

காலிஃப்ளவரை சுத்தம் செய்துவிட்டு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் காலிஃப்ளவர் , மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கொதி வர வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் தண்ணீரை வடிகட்டி காலிஃப்ளவரை தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
2/6

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மைதா, சோள மாவு, கரம் மசாலா, சிவப்பு மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து கலந்துகொள்ள வேண்டும்.
3/6

பின் வேக வைத்த காலிஃப்ளவரை துண்டுகளாக்கி இந்த கலவையில் சேர்த்து கலந்துகொள்ள வேண்டும்.
4/6

காலிஃப்ளவரில் மசாலா நன்கு இறங்க வேண்டும். 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
5/6

பின் கடாய் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு சூடானதும் காலிஃப்ளவரை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
6/6

காலிப்ளவர் பக்கோடா தயிர் சாதத்துக்கு ஒரு சூப்பர் காம்பினேஷனாக இருக்கும். தயிர் சாதத்துக்கு மேலும் சுவை கூட்ட காலி பிளவர் பக்கோடா உதவும். புலாவ் உடன் வைத்து சாப்பிடவும் காலிஃப்ளவர் 65 ஒரு நல்ல காம்பினேஷனாக இருக்கும்.
Published at : 22 Oct 2023 09:15 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement