மேலும் அறிய
Avocado Oil: சரும ஆரோக்கியத்திற்கு அவகேடோ இவ்வளவு நன்மைகள் செய்யுமா?
மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளிட்ட பல அத்தியாவச ஊட்டச்சத்துகள் உள்ளன.

அவகேடோ எண்ணெய்
1/6

ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி தோல் மற்றும் முடி சேதம் மற்றும் சிதைவுக்கான முக்கிய குறைபாடுகளை போக்குகிறது. அரிக்கும் தோலழற்சி, முகப்பரு போன்ற தோல் நிலைகளை சரி செய்யவும், சருமத்தின் நெகிழ்ச்சி தன்மையை மேம்படுத்தவும், சருமத்திற்கு இளமை தோற்றத்தை அளிக்கவும், கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
2/6

அவகோடா எண்ணெயில் வைட்டமின் ஈ தவிர பொட்டாசியம், லெசித்தின் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் அடங்கி இருப்பதால் சருமத்தை ஈரப்பதமாகவும், ஊட்டமாகவும் வைத்திருக்கும்.
3/6

இந்த பழத்தில் காணப்படும் ஆரோக்கியமான கொழுப்புகள் சருமத்தின் நெகிழ்ச்சி தன்மையைத் தக்க வைத்து, இளமையான தோற்றத்தை பராமரிக்க உதவுகிறது.
4/6

தோல் வறட்சியை எதிர்த்துப் போராடும். மேலும் கொலாஜன் உற்பத்தியையும் அதிகரிக்கக்கூடும்.
5/6

ஃப்ரீ ரேடிக்கல்ஸ் ஏஜ் ஸ்பாட்ஸ் எனப்படும் சரும சுருக்கங்கள் மற்றும் தோல் புற்றுநோய் போன்ற தீவிரமான மற்றும் அனைத்து வகையான தேவையற்ற தோல் மாற்றங்களுக்கும் காரணமாக அமைகின்றன.
6/6

அவகோடா ஆயிலில் காணப்படும் பீட்டா கரோட்டின், புரதம் , லெசித்தின், கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் ஏ, டி மற்றும் ஈ ஆகியவை உங்கள் சருமத்தை புற ஊதா கதிர்களை சேதப்படுத்தாமல் ஈரப்படுத்தவும் பாதுகாக்கவும் உதவுகின்றன.
Published at : 31 Oct 2023 08:30 PM (IST)
Tags :
Avocado Oil Bமேலும் படிக்க
Advertisement
Advertisement