மேலும் அறிய
Vijay Kutty Story : புலி முதல் வாரிசு வரை.. ரசிகர்களை கவர்ந்த விஜய்யின் குட்டிஸ்டோரீஸ்!
நடிகர் விஜய் தனது ஒவ்வொரு படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் சொல்லும் குட்டி கதை அவரின் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அது என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க...
நடிகர் விஜய்
1/7

புலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பேசுகையில் "ஒரு மனிதனுடைய வெற்றிக்கு பின்னாடி ஒரு ஆண் அல்லது ஒரு பெண் இருப்பாங்க என சொல்வார்கள். ஆனால் என்னுடைய வெற்றிக்கு பிறகு அவமானங்கள் தான் இருந்தன. உலகத்தின் மிகப்பெரிய பணக்காரரான பில்கேட்ஸ் சிறு வயதில் அவரை அனைவரும் குறை சொல்லி கொண்டே இருப்பார்களாம். மற்றவர்கள் சொல்லும் குறைகளை கேட்டு அதை சரி செய்து கொள்வாராம் பில் கேட்ஸ். பின்னர் அவர் உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆனார். ஆனால் அவரை குறை கூறியவர்கள் அவரின் நிறுவனத்தில் அவருக்கு கீழ் பணிபுரிந்தார்களாம். அதனால் நமக்கு தான் எல்லாம் தெரியும் மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது என நினைக்காதீர்கள். மற்றவர்கள் தான் நமக்கு எல்லாமே கற்றுக்கொடுத்தவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள் என்றார்.
2/7

தெறி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தான் படித்த ஒரு கதை பற்றி பேசியிருந்தார்.' முன்னாள் சீன அதிபர் மாவோ ஒரு முறை ரோட்டில் சென்று கொண்டு இருக்கும் போது ஒரு சின்ன பையன் தலைவர்களின் புகைப்படங்களை விற்றுக்கொண்டு இருப்பதை பார்த்தார். அருகில் சென்று பார்த்த போது தான் தெரிந்தது அத்தனையுமே அவரின் புகைப்படங்களாகவே தெரிந்தது. கொஞ்சம் கர்வம் இருந்தாலும் அந்த பையனிடம் சென்று என்ன தான் உனக்கு என் மேல பாசம், மரியாதை இருந்தாலும் நீ என்னுடைய புகைப்படங்களை மட்டும் விற்பது தப்பு. மற்ற தலைவர்களின் புகைப்படங்களையும் சேர்த்து விற்க வேண்டும் என அறிவுரை கூறியுள்ளார். அதற்கு அந்த பையன் அந்த புகைப்படங்கள் எல்லாம் எப்போதோ விற்று தீர்ந்து விட்டன. இது மட்டும் தான் விற்காமல் இருக்கிறது என பதில் அளித்துள்ளான். எனவே நாம் கர்வப்படாமல் வாழ்க்கையில் பல உயரங்களை தொட வேண்டும் என்றார்.
Published at : 22 Jun 2023 01:31 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
கிரிக்கெட்






















