மேலும் அறிய
HBD R Madhavan : ‘மேடி மேடி ஓ ஹோ மேடி’ சாக்லேட் பாய் மாதவனின் பிறந்தநாள் இன்று!
53வது பிறந்தநாளை காணும் எவர்கிரீன் ஹீரோ மாதவனுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் மாதவன்
1/6

மணிரத்னம் இயக்கத்தில் உருவான அலைபாயுதே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாதவன். முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்டாக அமைந்தது.
2/6

என்னவள், மின்னல், டும் டும் டும், பார்த்தாலே பரவசம் என தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தார். காதல் படங்களில் நடித்து வந்த மாதவன், ரசிகைகளின் சாக்லேட் பாய் மேடியாக வலம் வந்தார்.
3/6

தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே, ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் கன்னட மொழி படத்தில் நடித்தவர் இவர்.
4/6

நீண்ட நாட்களுக்கு பின் சுதா கொங்கராவின் இறுதிச்சுற்று படம் மூலம் கம்-பேக் கொடுத்தார். சாக்லேட் பாயாகவே இருந்த மேடி, இந்த படத்திற்காக தன் உடல் எடையை கூட்டி ரக்கட் பாயாக மாறினார்.
5/6

விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை, படமாக எடுத்தார். "ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்" என்ற இப்படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார்.
6/6

காதல் சடு குடு என்றால், நினைவிற்கு வரும் ஆப்பிள் பையன் மாதவனுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Published at : 01 Jun 2023 11:28 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement






















