மேலும் அறிய
JR 33 : இதுவரை இணையாத காம்போ..கிருத்திகா உதயநிதியுடன் கைக்கோர்க்கும் ஜெயம் ரவி!
நடிகர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவி, கிருத்திகா உதயநிதி, நித்யா மேனன்
1/6

பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழிவர்மனாக அசத்திய ஜெயம் ரவியின் அடுத்த படம் குறித்த தகவல் வந்துள்ளது.
2/6

நடிகர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கவிருக்கும், ஜெயம் ரவியின் 33-வது படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
3/6

இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.
4/6

மேலும், இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் அல்லது எ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
5/6

இந்த கூட்டணி இணைவது உறுதியானால் விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6/6

கிருத்திகா உதயநிதி இயக்கிய காளி படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் நிறைவாகியுள்ளது என்பது குறிப்பிடதக்கது
Published at : 18 May 2023 01:38 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement