மேலும் அறிய
Selvaraghavan Shelved Movies:அஜித்-பரத்தை வைத்து கேங்ஸ்டர் படம் எடுக்க இருந்த செல்வா..அவருடைய இத்தனை கதைகள் ரிலீஸ் ஆகவில்லை!
Selvaraghavan Shelved Movies: பிரபல இயக்குனர் செல்வராகவனின் பல கதைகள் படமாக உருவாக்கப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டன..அவை என்னென்ன படங்கள் தெரியுமா?

கிடப்பில் போடப்பட்ட செல்வராகவனின் படங்கள்
1/10

கோலிவுட்டில் முத்திரை பதித்த இயக்குனர்களுள் ஒருவர், செல்வராகவன். 7 ஜி ரெயின்போ காலணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றன
2/10

இவர் இயக்கிய/இயக்க இருந்த படங்கள் பல கிடப்பில் போடப்பட்டுள்ளன, அவை என்னென்ன தெரியுமா?
3/10

2021ஆம் ஆண்டு வெளியாகியிருந்த நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் 6 வருடங்களுக்கு முன்னதாகவே இயக்கப்பட வேண்டி இருந்தது. ஆனால், பல காரணங்களுக்காக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போடப்பட்டது
4/10

சிம்பு-த்ரிஷாவை வைத்து அலைவரிசை என்ற படத்தை செல்வா இயக்க இருந்தார். ஆனால், பண ரீதியான பிரச்சினைகள் நிறைய இருந்ததால் இப்படத்தின் பணிகள் தள்ளிப்போடப்பட்டன
5/10

பேய் ஓட்டும் நிலையம் என்ற படத்தையும் செல்வா இயக்க இருந்தார்
6/10

செல்வா, ராணாவை வைத்து வரலாற்று கதை ஒன்றை படமாக்க இருந்தார். ஆனால், அப்படத்தில் நடிக்க ராணா தயாராக இல்லாததால் அதுவும் கிடப்பில் போடப்பட்டது
7/10

நடிகர் விக்ரமுடன் சிந்துபாத் என்ற படத்தில் இணைய இருந்தார். சில நாட்கள் இந்தியாவைச் சுற்றியுள்ள இடங்களில் படப்பிடிப்புகளும் நடைப்பெற்றன. ஆனால், ஒரு சில காரணங்களினால் இப்படத்தின் பணிகள் தள்ளிப்போடப்பட்டன
8/10

கார்த்தி-சந்தியாவை வைத்து ‘இது மாலை நேரத்து மயக்கம்’ என்ற படத்தை செல்வா உருவாக்க இருந்தார்
9/10

தனுஷ்-சோனியா அகர்வாலுடன் இணைந்து டாக்டர்ஸ் என்ற படத்தை எடுக்க இருந்தார்
10/10

அஜித்,பரத் மற்றும் தனுஷை வைத்து ஒரு கேங்ஸ்டர் படத்தை உருவாக்க இருந்தார். நடிகர் விஜய்யை வைத்து 2005ஆம் ஆண்டில் படம் ஒன்றை இயக்க இருந்தார், செல்வராகவன். ஆனால், அது நடைபெறாமலேயே போனது. இதனால், அப்படத்தின் தயாரிப்பாளர் செல்வராகவனிடம் அந்த படத்திற்காக பெற்ற பணத்தை திருப்பி தருமாறு பிரச்சனை செய்தார். இதனால், அஜித்தை வைத்து இயக்க இருந்த படத்தின் பணிகளும் தள்ளிப்போனது
Published at : 05 Mar 2023 05:14 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
உலகம்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion