மேலும் அறிய
Leo Movie posters : போஸ்டர்களிலே லியோ படக்கதையை சொல்ல ஆரம்பித்த லோகேஷ் கனகராஜ்!
Leo Movie posters : படம் வெளியாவதற்கு முன்பாகவே, கதைகளத்தில் நம்மை ஈடுபடுத்தும் வகையில் போஸ்டர்களை வெளியிட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

லியோ போஸ்டர்கள்
1/6

இதுதான் லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர். பெரும் எதிர்ப்பார்புகளுக்கு இடையே, அக்மார்க் ஹாலிவுட் தரத்திலான இந்த லுக் வெளியானது. கோர முகத்துடன் விஜய், தெறிக்கும் பல்,கழுதை புலி, சுத்தியல் என அனைத்தும் வன்முறையை குறித்தது. “இந்த உலகில் இருக்கும் அடக்கமுடியாத நதிகளில் இருக்கும் நீரானது, கடவுளாகவோ சாத்தானாகவோ மாறும்.” என்ற வாசகம் இடம்பெற்று இருந்தது.
2/6

அதன் பின் பர்ஸ்ட் சிங்களான ஆல்டர் ஈகோ நான் ரெடியின் போஸ்டர் வெளியானது. அல்டர் ஈகோ என்ற வார்த்தை, மக்களை சற்று குழப்பியது. ஒரு நபர், வேறுபட்ட இரு வாழ்க்கையை வாழ்வதே அல்டர் ஈகோ எனப்படும். உதாரணத்திற்கு, ஸ்பைடர் மேனில் வரும் பீட்டர் பார்கர் எனும் சாமானிய மனிதரே, உலக மக்களை காப்பாற்றும் சூப்பர் ஹீரோவாக கதையில் வலம் வருவார். அதுபோல், லியோ எனும் கதாபாத்திரத்திற்கு சாந்தமான முகமும் ஆக்ரோஷமான முகமும் இருக்கும் என்பது நீர் மற்றும் பனியால் குறிக்கப்பட்டது.
3/6

அடுத்தாக தெலுங்கு போஸ்டர் வெளியானது. ‘அமைதியாக இருந்து போரினை தவிர்க்க வேண்டும்’என்ற வாசகம் இந்த போஸ்டரில் இடம்பெற்றது. பாசத்திற்கு முன்னால் நான் பனி, என்பதற்கு ஏற்றவாறு இந்த போஸ்டரும் பனியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது.
4/6

அடுத்தாக கன்னட போஸ்டர் வெளியானது. ‘அமைதியாக இருந்து, தப்பிக்க வேண்டும்’என்ற வாசகம் இந்த போஸ்டரில் இடம்பெற்றது. பிரச்சினைகளை தவிர்க்க முடியாத சூழ்நிலையில், அதில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.
5/6

அதன் பின், தமிழ் போஸ்டர் வெளியானது. ‘அமைதியாக இருந்து, போருக்கு ஆயத்தம் ஆக வேண்டும்’என்ற வாசகம் இந்த போஸ்டரில் இடம்பெற்றது. ஓரளவுக்குத்தான் பொருமையாக இருக்க முடியும் அதன் பின் ரணகளம்தான்.. என்பதை காட்சிப்படுத்துகிறது லியோ கத்தியை தீட்டும் ஸ்டில்.
6/6

இறுதியாக ஹிந்தி போஸ்டர் வெளியானது. ‘அமைதியாக இருந்து, சாத்தானை எதிர்கொள்ள வேண்டும்’என்ற வாசகம் இந்த போஸ்டரில் இடம்பெற்றது. பாசத்திற்கு முன் பனியாக இருந்த லியோ பகைக்கு முன் புலியாக மாறியதை இதில் காணமுடிகிறது.பாலிவுட் சினிமா ரசிகர்களை கவரும் விதமாக, ஹிந்தி போஸ்டரில் சஞ்சய் தத்தை பயன்படுத்தியதுதான் ஹைலைட்.
Published at : 22 Sep 2023 11:42 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சேலம்
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion