மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Dhanush Blue Tick : தனுஷின் ப்ளு டிக்கை நீக்கிய ட்விட்டர் நிறுவனம்..காரணம் என்ன?
Dhanush Blue Tick: நடிகர் தனுஷின் ட்விட்டர் கணக்கில் ப்ளு டிக் திடீரென நீக்கப்பட்டுள்ளது.
![Dhanush Blue Tick: நடிகர் தனுஷின் ட்விட்டர் கணக்கில் ப்ளு டிக் திடீரென நீக்கப்பட்டுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/29/b77eedcdb33b3b7f3a8285b4842177dc1690631789287501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தனுஷ்
1/6
![ட்விட்டர் சிஇஓ-வாக எலன் மஸ்க் செயல்பட்டு வரும் நிலையில், நிறுவனத்தின் நிதி நிலைமையை அதிகரிக்கும் வகையில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் நீல நிற குறியீடுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/29/bb0f0c2fbddadc38736b7434f279bdd57022c.png?impolicy=abp_cdn&imwidth=720)
ட்விட்டர் சிஇஓ-வாக எலன் மஸ்க் செயல்பட்டு வரும் நிலையில், நிறுவனத்தின் நிதி நிலைமையை அதிகரிக்கும் வகையில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் நீல நிற குறியீடுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
2/6
![இணையத்தில் ரூ.650 மற்றும் மொபைல் சாதனங்களில் ரூ.900 என மாதக் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டது. அதேசமயம் யார் வேண்டுமானாலும் பணம் செலுத்தி ப்ளூ டிக் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. பணம் செலுத்தாத பயனாளர்களுக்கு ப்ளூ டிக் முதலில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நீக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் இதன் கால அவகாசம் ஏப்ரல் 20ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/29/85bce23e71f793751025b0f31fbed4748d429.png?impolicy=abp_cdn&imwidth=720)
இணையத்தில் ரூ.650 மற்றும் மொபைல் சாதனங்களில் ரூ.900 என மாதக் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டது. அதேசமயம் யார் வேண்டுமானாலும் பணம் செலுத்தி ப்ளூ டிக் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. பணம் செலுத்தாத பயனாளர்களுக்கு ப்ளூ டிக் முதலில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நீக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் இதன் கால அவகாசம் ஏப்ரல் 20ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டது.
3/6
![மேலும் பயனாளர்களுக்கு ப்ளூ டிக், வணிக அக்கவுண்ட்களுக்கு கோல்டன் டிக், அரசு அமைப்புகளுக்கு கிரே டிக் என 3 வகையும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இப்படியான நிலையில் கடந்த 21ஆம் தேதி நள்ளிரவு ட்விட்டரில் கட்டணம் செலுத்தாத அரசியல், விளையாட்டு, சினிமா என அனைத்து துறையினரின் ப்ளூ டிக்கும் நீக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/29/df0ccd541cc7846f735d20969a5443a38d767.png?impolicy=abp_cdn&imwidth=720)
மேலும் பயனாளர்களுக்கு ப்ளூ டிக், வணிக அக்கவுண்ட்களுக்கு கோல்டன் டிக், அரசு அமைப்புகளுக்கு கிரே டிக் என 3 வகையும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இப்படியான நிலையில் கடந்த 21ஆம் தேதி நள்ளிரவு ட்விட்டரில் கட்டணம் செலுத்தாத அரசியல், விளையாட்டு, சினிமா என அனைத்து துறையினரின் ப்ளூ டிக்கும் நீக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
4/6
![இந்நிலையில் இதனையடுத்து இரண்டு நாட்களுக்கு பிறகு ஒரு மில்லியன் ஃபாலோயர்ஸ்களைக் கொண்ட பயனாளர்களுக்கு மீண்டும் ப்ளூ டிக் வழங்கப்பட்டது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/29/e3e041c6752fab5d4abe2ca7b34ba27e6f185.png?impolicy=abp_cdn&imwidth=720)
இந்நிலையில் இதனையடுத்து இரண்டு நாட்களுக்கு பிறகு ஒரு மில்லியன் ஃபாலோயர்ஸ்களைக் கொண்ட பயனாளர்களுக்கு மீண்டும் ப்ளூ டிக் வழங்கப்பட்டது.
5/6
![இதற்கிடையே, நேற்று வரை தனுஷின் டிவிட்டர் கணக்கில் ப்ளு டிக் இருந்த நிலையில் இன்று திடீரென நீக்கப்பட்டுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/29/696cfc277117b32d6dad9c7f4a84a2bfaca6f.png?impolicy=abp_cdn&imwidth=720)
இதற்கிடையே, நேற்று வரை தனுஷின் டிவிட்டர் கணக்கில் ப்ளு டிக் இருந்த நிலையில் இன்று திடீரென நீக்கப்பட்டுள்ளது.
6/6
![தனுஷின் ட்விட்டர் ப்ளு டிக் நீக்கப்பட்டதற்கு காரணம் தெரியாமல் ரசிகர்கள் குழம்பி போய் உள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/29/733ebd9334f6a68a9cda9347defd9b69735f4.png?impolicy=abp_cdn&imwidth=720)
தனுஷின் ட்விட்டர் ப்ளு டிக் நீக்கப்பட்டதற்கு காரணம் தெரியாமல் ரசிகர்கள் குழம்பி போய் உள்ளனர்.
Published at : 29 Jul 2023 05:42 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion