மேலும் அறிய
Twitter Bluetick : ’உனை காணவில்லையே நேற்றோடு..’ப்ளூ டிக்கை இழந்து சோக ட்வீட் வெளியிட்ட பிரபலங்கள்!
Twitter Bluetick: ட்விட்டர் ப்ளூ டிக்கை இழந்த பிரபலங்கள் வெவ்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
ட்விட்டர் புளூடிக்கை இழந்த பிரபலங்கள்
1/6

நேற்று ட்விட்டரில் பணம் செலுத்தாத பயனாளர்கள் மற்றும் நட்சத்திரங்களின் ப்ளு டிக் நீக்கப்பட்டது. ப்ளூ டிக்கை இழந்த பிரபலங்கள் வெவ்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
2/6

முதலில் மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலம் ஆனவர் நடிகை ஆத்மிகா, இவர் ப்ளூ டிக்கை இழந்ததையடுத்து தனது பெயரின் அருகில் இங்கு ப்ளூ டிக் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
3/6

இந்தியில் பழம்பெரும் நடிகரான அமிதாப் பச்சன், “ட்விட்டர் சகோதரரே! பணத்தை செலுத்திவிட்டேன், எனது ப்ளூ டிக்கை திருப்பி தாருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
4/6

தென்னிந்திய திரை துறையில் முக்கிய நடிகரான பிரகாஷ் ராஜ், “நீங்கள் என்னுடன் இருந்ததில் மகிழ்ச்சி.. எனது பயணம்.. எனது உரையாடல்கள்.. எனது பகிர்வு... எனது மக்களுடன் தொடரும்... டேக் கேர்” என்று ப்ளூ டிக்கிற்கு பிரியா விடை கொடுத்துள்ளார்.
5/6

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர், நடிகை மற்றும் மாடல் சனம் ஷெட்டி, இவர் “வட போச்சே” என்று ட்வீட் செய்துள்ளார்.
6/6

பாலிவுட் பிரபல நடிகரான ஷாகித் கபூர், “என் ப்ளூ டிக்கை தொட்டது யார்? எலான், அங்கேயே இரு நான் வருகிறேன்” என்று தனது கபீர் சிங் திரைப்பட காட்சியுடன் ஒப்பிட்டு நக்கலாக பதிவிட்டுள்ளார்.
Published at : 21 Apr 2023 07:12 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















