மேலும் அறிய
Arun Vijay Thiruvannamalai : மனைவியுடன் அண்ணாமலையார் கோவிலுக்கு வந்த அருண் விஜய்!
Arun Vijay Thiruvannamalai : இவர் நடிப்பில் வெளியாகவுள்ள மிஷன் திரைப்படம் வெற்றி பெற வேண்டி அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலையம்மனை சாமி தரிசனம் செய்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அருண் விஜய்
1/6

1995 ஆம் ஆண்டில் இருந்து நடித்து வந்த அருண் விஜய்யின் வாழ்க்கையை திருப்பி போட்ட படம் என்னை அறிந்தால். இதனை தொடர்ந்து கவனத்தை ஈர்க்கும் வகையில் பல படங்களில் நடித்து வருகிறார்.
2/6

திருவண்ணாமலை நகரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் நடிகர் அருண்விஜய் தனது மனைவி ஆர்த்தியுடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.
3/6

அருண்விஜய் நடித்துள்ள மிஷன் திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது. படம் வெற்றி பெற வேண்டி அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலையம்மனை சாமி தரிசனம் செய்தார்.
4/6

கோயில் நிர்வாகத்தின் மூலம் நடிகர் அருண் விஜய்க்கு மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது.
5/6

அதேபோன்று அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நடிகர் அருண்விஜயுடன் போட்டி போட்டுக் கொண்டு செல்பி எடுத்தனர்.
6/6

அருண்விஜய் நேற்று இரவு தனது மனைவி ஆர்த்தியுடன் அருணாசலேஸ்வரர் திருக்கோவிலின் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இந்திரலிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதிலிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், சந்திரலிங்கம், குபேர லிங்கம், ஈசானியலிங்கம் உள்ளிட்ட அஷ்ட லிங்கங்களுக்கும் சென்று கற்பூரம் ஏற்றி சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.
Published at : 05 Aug 2023 09:48 AM (IST)
View More
Advertisement
தலைப்பு செய்திகள்
மயிலாடுதுறை
வணிகம்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement





















