மேலும் அறிய

நம்பவே முடியலப்பா.. 90 வயதில் பாடி பில்டிங்.. இளசுகளுக்கு டஃப் கொடுக்கும் தாத்தா..!

90 வயதிலும் பாடி பில்டராக வலம் வரும் முதியவர், தனது குழந்தை பருவமே பாடி பில்டிங் மீது தான் ஆர்வம் செலுத்த காரனமாக என கூறியுள்ளார்.

உலகின் மிகவும் வயதான பாடிபில்டராக வலம் வரும் முதியவர் ஒருவர்  90 வயதிலும் உடற்பயிற்சி எடுத்து வருகிறார். 

90 வயதில் பாடிபில்டிங்:

அமெரிக்காவை சேர்ந்த ஜிம் ஆரிங்டன் என்ற முதியவர் இணையத்தில் வைரலாகி வருகிறார். அதற்கு காரணம், தள்ளாத வயதிலும் அந்த முதியவர் உடற்பயிற்சி செய்து பாடி பில்டராக தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதுதான். 

ஜிம் ஆரிங்டன் 2015ம் ஆண்டு தனக்கு 83 வயது இருக்கும் போது பாடி பில்டிங்கில் உலக சாதனை படைத்தார். உலகின் மிகவும் வயதான பாடிபில்டர் என கின்னஸ் ரெக்கார்டு புத்தகத்தில் இடம்பெற்றார். அதன் பிறகும் பாடிபில்டிங்கில் ஓய்வு பெறாத ஜிம் ஆரிங்டன் தொடர்ந்து, தொடர்ந்து உடற்பயிற்சி எடுத்து தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். அண்மையில், ரெனோவில் நடந்த IFBB புரொபஷனல் லீக் போட்டியில் பங்கேற்ற ஜிம் ஆரிங்டன், 70 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் பாடி பில்டர் பிரிவில் 3வது இடத்தையும், 80 வயதுக்கு மேற்பட்ட பாடி பில்டர் பிரிவில் முதல் இடத்தையும் பிடித்து அசத்தினார். 

சுவாரஸ்ய பின்னணி:

வயதானாலும் பாடி பில்டிங் மீது ஆர்வம் செலுத்துவதற்கான காரணத்தை ஜிம் ஆரிங்டனே கூறியுள்ளார். சமீபத்தில் பேட்டியளித்த அவர், தனது குழந்தை பருவமே பாடி பில்டிங் மீது தான் ஆர்வம் செலுத்த காரனமாக இருந்ததாக கூறியுள்ளார். குறை பிரசவத்தில் பிறந்ததால் ஜிம் ஆரிங்டன் மிகவும் ஆரோக்கியமற்றவராக இருந்துள்ளார். குழந்தையாக இருக்கும் போது அடிக்கடி நோய் வாய்ப்பட்ட ஜிம் ஆரிங்டன், ஆஸ்துமா நோயாளும் அவதிப்பட்டு வந்துள்ளார். ஜிம்மின் உயிரை கப்பாற்ற அவரது பெற்றோர் போராடியுள்ளனர். 

இதனால் 15வது வயதில் தனது உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள விரும்பிய ஜிம் ஆரிங்டன், உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் செலுத்தியுள்ளார். பளு தூக்குவதில் அதிக ஆர்வம் செலுத்திய ஜிம் ஆரிங்டன், ஒரு பாடி பில்டராக வலம் வர தொடங்கினார். 90 வயது ஆனாலும் உடற்பயிற்சி செய்து வரும் ஜிம் ஆரிங்டன் பிறருக்கு உதாரணமாக இருந்து வருகிறார். தனது உணவில் பால், மாட்டிறைச்சி, ஆலிவ் எண்ணெய், காளான்களை அதிகளவில் எடுத்து கொள்வதாக ஜிம் ஆரிங்டன் கூறியுள்ளார். 

தான் உயிருடன் இருக்கும் வரை தொடர்ந்து உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பேன் என ஜிம் ஆரிங்டன் கூறியுள்ளார். 

மேலும் படிக்க: Kolai Review: வித்தியாசமான மேக்கிங்... துப்பறியும் நிபுணராக விஜய் ஆண்டனி ஈர்த்தாரா... ‘கொலை’ படத்தின் முழு விமர்சனம் இதோ..!

Aneethi Review: பதைபதைக்க வைக்கும் காட்சிகள்... வசந்தபாலனின் அநீதி படம் சூப்பரா? ..சுமாரா? - முழு விமர்சனம் இதோ..!

CM Stalin EXCLUSIVE Interview: ஏபிபி நாடுவுடன் முதல்வர் ஸ்டாலின்! பூரண மதுவிலக்கு முதல் வாரிசின் வளர்ச்சிவரை.. சுளீர் கேள்விகளும் பளீர் பதில்களும்! மெகா எக்ஸ்குளூசிவ்

தலைப்பு செய்திகள்

Iran warns US : எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Trump's Fee Plan-Students: யோவ் ட்ரம்ப்பே.! மாணவர்கள கூட விட்டு வைக்க மாட்டியா.? US-ல் படித்து முடித்து வேலைக்கு சேர ரூ.1 கோடி ஃபீஸ்
யோவ் ட்ரம்ப்பே.! மாணவர்கள கூட விட்டு வைக்க மாட்டியா.? US-ல் படித்து முடித்து வேலைக்கு சேர ரூ.1 கோடி ஃபீஸ்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Embed widget