Video : வாஷிங்டனில் துப்பாக்கிச்சூடு.. ஆயுதங்களை ஏந்தி வந்த மர்ம நபர்களால் பரபரப்பு.. என்ன நடந்தது?
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் இந்த வாரம் பரபரப்பான துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் இந்த வாரம் பரபரப்பான துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. சம்பவம் நடைபெற்ற பகுதியில் காரில் அமர்ந்திருந்த இரண்டு பேரை தாண்டி குதிக்க, தாக்குதல் நடத்த வந்த மூன்று பேர் முயற்சி செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக வைரலாகி வருகிறது.
Wild Shootout In Washington Heights, Passerby Shot: VIDEO | Washington Heights, NY Patch We are so neglected. Hurry up gentrification! https://t.co/ptLNtpgNve
— NYCHomelessGUY39 (@formerhomeles39) August 26, 2022
சம்பவத்தை விவரித்த காவல்துறை அலுவலர்கள், "புதன்கிழமை இரவு 9 மணியளவில் ஆம்ஸ்டர்டாம் அவென்யூ அருகே மேற்கு 159வது தெருவில் நிறுத்தப்பட்டிருந்த ஹோண்டா CRB காரின் கார் கதவை லேசர் பொருத்தப்பட்ட துப்பாக்கிகளை ஏந்திய மூவர் தாக்கினர்" என்றார்.
தாக்குதல் நடத்தியவர்கள் டிரைவரை காரில் இருந்து வெளியே இழுத்து அருகில் உள்ள கட்டிடத்தின் வாயில் மீது வீசியதை வீடியோவில் காணலாம். காரில் இருந்த மற்ற பயணிகள் காரிலிருந்து வெளியேறி தாக்குதல் நடத்தியவர்களை நோக்கி சுட்டனர். இதையடுத்து, தாக்க வந்தவர்களும் துப்பாக்கியால் திரும்பி சுட்டனர்.
Three men carrying guns with lasers attached tried to jump two people in a car near West 159th Street, but the men fought and shot back. https://t.co/BeunOEmPKg
— Jamaica Patch (@JamaicaNYCPatch) August 26, 2022
மூன்று நபரால் தாக்குதலுக்கு உள்ளான கார் ஓட்டுநர், தாக்குதல் நடத்திய ஒருவரிடமிருந்து துப்பாக்கிய பிடிங்க திரும்பி சுட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பயணிகளும் கார் ஓட்டுநரும் திரும்ப சுட்டதால் தாக்குதல் நடத்த வந்த மூவர் தப்பி ஓடினர். இதையடுத்து, இரண்டு பயணிகள் காரில் ஏறி ஓட்டி சென்றனர்.
துப்பாக்கிச் சுடுதலின்போது, தெருவில் நின்று கொண்டிருந்த 33 வயதுடைய நபர் ஒருவரின் நெற்றியில் தோட்டா பாய்ந்தது. அவர் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
Three men carrying guns with lasers attached tried to jump two people in a car near West 159th Street, but the men fought and shot back. https://t.co/caYBESIk2G
— New York City Patch (@NYC_Patch) August 26, 2022