Watch Video| 4 ஆண்டு பயிற்சி... ஏப்பம் விட்டு கின்னஸ் சாதனை படைத்த நபர்- வைரல் வீடியோ !
ஏப்பம் விட்டு ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக மனிதர்களுக்கு இருமல், கொட்டாவி, தும்மல், ஏப்பம் போன்றவை வருவது இயல்பான ஒன்று தான். ஆனால் அதைவைத்து ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார் என்பதை கேட்டால் நமக்கு பெரிய ஆச்சரியம் வந்துவிடும். ஆம் அப்படி தான் ஒருவர் தற்போது கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அது யார்? எப்படி செய்தார்?
ஆஸ்திரேலியாவை சேர்ந்த நெவில் என்ற நபர் சமீபத்தில் ஏப்பம் விட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இது தொடர்பாக கின்னஸ் சாதனை அமைப்பின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்கில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அதன்படி அந்த வீடியோவில் நெவில் 112.4 டெசிபெள் அளவிற்கு சத்தமாக ஏப்பம் விட்டு கின்னஸ் சாதனை படைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
View this post on Instagram
இதன்மூலம் அவர் 12 ஆண்டுகளுக்கு முன்பாக பிரிட்டன் நபர் ஒருவர் செய்திருந்த சாதனையை இவர் முறியடித்துள்ளார். இந்த சாதனை தொடர்பாக நெவில்,”நான் உலக சாதனை செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசைப்பட்டேன். அதற்காக மிகவும் சத்தமாக ஏப்பம் விடுவதை தேர்வு செய்தேன். ஏனென்றால் நான் என்னுடைய சிறுவயது முதல் மிகவும் சத்தமாக ஏப்பம் விடுவேன். அதை கடந்த 5 ஆண்டுகளாக சாதனை செய்ய பயன்படுத்த தீவிரமாக பயிற்சி மேற்கொண்டேன். தற்போது கின்னஸ் சாதனை படைத்துவிட்டேன்” எனக் கூறியுள்ளார். இந்த வீடியோவை பார்த்து பலரும் வியந்து தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
Awesome
— eightiesdisco (@eightiesdisco) November 30, 2021
That’s impressive 👏 https://t.co/gHRGF6ScYY
— Gemma Starley💙 (@Starbar82) December 1, 2021
Amazing!!🥳😂gongrats!✌🏼
— RonWatti (@JWattimena1) December 2, 2021
மேலும் படிக்க:தெர்மாகோலுக்கு ‛டப்’ கொடுக்கும் இந்தோனேசியா... அணையில் மிதக்கும் சோலார் பேனல்கள்!