தெர்மாகோலுக்கு ‛டப்’ கொடுக்கும் இந்தோனேசியா... அணையில் மிதக்கும் சோலார் பேனல்கள்!
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத, 1.45 லட்சம் சூரிய ஒளித் தகடுகள், அந்த நீர்த் தேக்கத்தின் மீது மிதக்கும் படி வைக்கப்பட்டுள்ளன. அவை சூரிய ஆற்றலை சேமித்து, 45 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.
உலகளவில் புதுப்பிக்க முடியாத ஆற்றல்களை (non-renewable resources) மட்டுமே அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். குறிப்பாக பெட்ரோல், டீசல், நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பு போன்ற அனைத்துமே புதுப்பிக்க முடியாத ஆற்றல்கள் மூலமாக நமக்கு கிடைக்கின்றவை. இதை அதிக அளவில் நாம் பயன்படுத்தி வருவதால் சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இதன் தட்டுப்பாடு தொடங்கிவிட்டது. இதற்கு மாற்றாக புதுப்பிக்க கூடிய ஆற்றல்களை (renewable resources) நாம் பயன்படுத்த வேண்டும் என்று அறிவியல் ஆய்வாளர்கள் பல காலமாக கூறி வருகின்றனர். அதில் சூரிய ஒளி மின்சார தயாரிப்பு என்பது மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. சுற்றசூழலை பெரிதும் பாதிக்காத வகையில் மின்சாரம் தயாரிக்க கூடிய முறைகளில் முக்கியமானது சூரிய ஒளி மின்சார தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பு குறைவான உற்பத்திகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், அதனை செய்ய ஒவ்வொரு நாடும் புது புது முயற்சிகளை எடுக்கிறது.
அந்த வகையில் தாய்லாந்து விரைவில் சூரிய ஒளி மின்சார தயாரிப்பில் சாதனை படைக்கப்போகிறது. அங்குள்ள சிரிந்தோர்ன் அணைக்கட்டின் நீர் பரப்பின் மீது ஒரு மிதக்கும் சூரிய மின் பலகை பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத, 1.45 லட்சம் சூரிய ஒளித் தகடுகள், அந்த நீர்த் தேக்கத்தின் மீது மிதக்கும் படி வைக்கப்பட்டுள்ளன. அவை சூரிய ஆற்றலை சேமித்து, 45 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. நீர்த் தேக்கத்தின் மேற்பரப்பில் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே சூரியப் பலகை மிதவைகளால் மூடப்பட்டுள்ளது. எனவே, அணையின் நீர் மற்றும் அதில் வாழும் மீன் இனங்களுக்கு எந்த பாதிப்பும் வராது என இத்திட்டத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.குளிர்ந்த நீரின் மீது மிதக்கும் சூரியப் பலகைகள், வெப்ப காலத்தில் அதிகம் சூடேறுவது தவிர்க்கப்படும். மேலும் மின் உற்பத்தி விகிதமும் 10 முதல் 15 சதவீதம் அதிகரிக்கும் என இத்திட்டத்தின் பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த திட்டத்தின் மூலம் வெறும் மின்சார தயாரிப்பை மட்டும் தாய்லாந்து சாத்திய படுத்தவில்லை. அதன் இன்னொரு பக்கவிளைவாக, சிரிந்தோர்ன் அணைக்கட்டின் நீர் இருப்பு ஆவியாவது ஆண்டுக்கு 4.6 லட்சம் கனமீட்டர் அளவுக்கு தடுக்கப்படும். நீர் பரப்பின் மீது நேரடி வெயிலின் வெப்பம் படுவது குறைக்கப்படுவதால், நீர் ஆவியாதல் பெரிதும் தடுக்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, இதன்மூலம் தாய்லாந்தின் காற்றில் ஆண்டுக்கு 24 ஆயிரம் டன்கள் பசுமைக்குடில் வாயுக்கள் கலப்பது தடுக்கப்படும் என தாய்லாந்து மின் உற்பத்தி ஆணைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இப்படிப்பட்ட மின்சார உற்பத்தி பலன் தருமாயின் பல உலக நாடுகள் அவற்றை பின்பற்றும் என்று தெரிகிறது.