Joe Biden : வெள்ளை மாளிகையில் இந்த ஆண்டும் மின்னப்போகும் ஒளி… ஜோ பைடனின் தீபாவளி இப்படி இருக்குமாம்..
"ஆம், அவர் கடந்த ஆண்டைப் போலவே தீபாவளியைக் கொண்டாட திட்டமிட்டுள்ளார்", என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரேன் ஜீன்-பியர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த ஆண்டு தீபாவளியை வெள்ளை மாளிகையில் கொண்டாட திட்டமிட்டுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். எனினும் எப்போது கொண்டாடப்போகிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
வெள்ளை மாளிகையில் தீபாவளி!
இந்தியாவின் மிக முக்கியமான கொண்டாட்டமாக பார்க்கப்படுவது தீபாவளி பண்டிகை ஆகும். இந்தியர்கள் பட்டாசு வெடித்து, புத்தாடை உடுத்தி வெகு விமரிசையாக ஒளி, ஒலி உடன் கொண்டாடும் இந்த பாரம்பரியமான பண்டிகை கொண்டாடப்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. இந்த நிலையில், அமெரிக்க பிரதமர் ஜோ பைடன் தீபாவளியை வெள்ளை மாளிகையில் கொண்டாடப்போவதாக அறிவித்துள்ளார். ஆனால் இதற்கான தயாரிப்புகளின் விவரங்கள் மற்றும் தொடர்புடைய தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. "ஆம், அவர் கடந்த ஆண்டைப் போலவே தீபாவளியைக் கொண்டாட திட்டமிட்டுள்ளார்", என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரேன் ஜீன்-பியர் செய்தியாளர்களிடம் தனது தினசரி செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
எப்போது கொண்டாடப்போகிறார்?
"இந்த வருட தீபாவளியை எப்போது கொண்டாடுவார் என்ற தேதிகள் முடிவாகவில்லை, ஆனால் அவர் இந்த நாட்டில் இந்தியா மற்றும் இந்திய அமெரிக்கர்களுடன் ஒற்றுமையை பார்ப்பதால் தீபாவளி கொண்டாடுவது மிகவும் முக்கியமானது என்று அவர் கருதுகிறார்" என்று ஜீன்-பியர் பதிலளித்தார். தற்போதைய ஜோ பைடன் அரசாங்கம் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகபவர் தெரிவித்தார்.
புஷ் தொடங்கி வைத்த கலாச்சாரம்
இதற்கிடையில், மேரிலாந்து கவர்னர் லாரன்ஸ் ஹோகன் அக்டோபர் மாதத்தை இந்து பாரம்பரிய மாதமாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜியார்ஜ் புஷ் ஆட்சியில் தொடங்கிய இந்த தீபாவளி கொண்டாடும் நிகழ்வு, அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் வெள்ளை மாளிகையில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை இடையில் பாரக் ஒபாமாவுக்கு பின்பற்றினார். கடந்த வருடம் ஜோ பைடனும் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க வாழ் இந்தியர்கள்
ஜோ பைடன் தனது ஆட்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு எப்போதுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். சொல்லப்போனால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தில் 130 க்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் முக்கியப் பதவிகளில் நியமிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் முன்பு வெளியாகி இருந்தன. இதற்கு முன்பு அதிபராக இருந்த டொனால்டு ட்ரம்ப் தன்னுடைய நிர்வாகத்தில் 80 அமெரிக்க வாழ் இந்தியர்களையும், அதற்கு முன்பு இருந்த ஒபாமா தன்னுடைய நிர்வாகத்தில் 60 பேரையும் உயர் பதவிகளில் நியமித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போதைய அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸும் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்னும் பட்சத்தில் இந்த ஆட்சியில் இந்தியர்களுக்கான முன்னுரிமை இருப்பதாக பலர் தெரிவிக்கொன்றனர்.