Donald Trump: நிறைமாத கர்ப்பிணிகள் அலறல், ட்ரம்பை கூப்பில் உட்கார வைத்த நீதிமன்ற உத்தரவு - இந்தியர்கள் ஹாப்பி
Donald Trump Citizenship: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் உத்தரவால் கலக்கத்தில் இருந்த கருவுற்ற பெண்கள், நீதிமன்ற தலையீட்டால் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

Donald Trump Citizenship: புலம்பெயர்ந்தோரின் குழந்தைகளுக்கான பிறப்புரிமை குடியுரிமையை ரத்து செய்யும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஃபெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவமனையில் குவியும் கர்ப்பிணிகள்:
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றதில் இருந்தே டொனால்ட் ட்ரம்ப் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அதில் மிகவும் முக்கியமானது அமெரிக்காவில் பிப்ரவரி 19ம் தேதிக்குப் பிறகு பிறக்கும் புலம்பெயர்ந்தோரின் குழந்தைகளுக்கு நேரடியாக குடியுரிமை வழங்கப்படாது என்பதாகும். இது நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து 8 மற்றும் 9வது மாதம் கருவுற்ற பெண்கள் கூட, தற்போதே மருத்துவமனைகளில் குவிய தொடங்கியுள்ளனர். மருத்துவர்கள் பரிந்துரைத்த தேதிக்கு முன்பே, அறுவை சிகிச்சை மூலம் தங்களது குழந்தைகளை வெளியே எடுக்க பெண்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கான முன்பதிவுகளையும் மேற்கொண்டு வருகின்றனர். கருவுற்ற 7 மாதங்களே ஆன பெண்கள் கூட இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ட்ரம்புக்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்:
இந்த சூழலில் தான், அமெரிக்காவில் பிறக்கும் புலம்பெயர்ந்தோரின் குழந்தைகளுக்கு நேரடி குடியுரிமை வழங்குவதை ரத்து செய்த ட்ரம்பின் உத்தரவை, சியாட்டில் ஃபெடரல் நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. ட்ரம்பின் முடிவு அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். ஜனநாயகக் கட்சி தலைமையிலான பொலோசோலா - வாஷிங்டன், அரிசோனா, இல்லினாய்ஸ் மற்றும் ஓரிகானில் நான்கு மாநிலங்களின் முன்னெடுப்பின் பேரில், ட்ரம்ப் முதல் நாளிலேயே பிறப்பித்த உத்தரவை நிர்வாக ரீதியாக செயல்படுத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஆண்டுக்கு 1.5 லட்சம் குழந்தைகள்:
அமெரிக்காவில் புலம்பெயர்தோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நேரடியாக, அமெரிக்கக் குடியுரிமை வழங்கலாம் என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் 127 ஆண்டுகளுக்கு முன்பு உறுதி செய்தது. ட்ரம்பின் உத்தரவு அமல்படுத்தப்படும் பட்சத்தில், ஆண்டுதோறும் புதிதாகப் பிறக்கும் 150,000 குழந்தைகளுக்கு குடியுரிமை மறுக்கப்படும் என ஜனநாயக கட்சியினர் வாதிட்டு வருகின்றனர். மறுபுறம், அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கே முக்கியத்தும் என்ற கொள்கையுடன் ட்ரம்ப் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தான், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு பெற்றோர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் நேரடி குடியுரிமையை ரத்து செய்து உத்தரவிட்டார். ஆனால், அந்த உத்தரவை நீதிமன்றம் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதால், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு பெற்றோர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். அதேநேரம், ட்ரம்ப்புக்கு இது பின்னடைவாக கருதப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

