நல்ல நண்டு வாங்க டிப்ஸ் இதோ!
நண்டில் வைட்டமின் ஏ, பி12, ஒமேகா 3 கொழுப்பு அமிலம், புரதம், செலீனியம். தாமிரம், பாஸ்பரஸ் போன்ற கனிமச்சத்து கள் அதிகளவில் நிறைந்துள்ளன. கலோரி குறைவு.
நண்டு சாப்பிடுவது மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. மூளை சிறப்பாக செயல்பட வும்,நரம்புமண்டல செயல்பாடுகளுக்கும் இது உதவி செய்கிறது.
நண்டில் உள்ள வைட்டமின் ஏ, கண் பார்வைக்கு உதவுகிறது. இதிலுள்ள ரெட்டினால், ரெட்டினியோக் அமிலம், பீட்டா கரோட் டின் ஆகியவை கண் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் பிரதான இடத்தை பிடிக்கின்றன.
கால்சியம் அதிகம் உள்ளதால், எலும்பு தேய் மான பிரச்சினைகளுக்கு நண்டு அருமருந்தாகிறது.சமைப்பதற்காக வாங்கும்போது உயிருடன் உள்ள நண்டை வாங்குவது நல்லது. செத்த நண்டுகள் சில மணி நேரத்தில் கெட்டுப்போய்விடும்.
பெரிய அளவிலான நண்டுகளை வாங்குவதை விட நடுத்தர அளவு நண்டை வாங்கலாம். அதில்தான் ருசி அதிகம்.
டைப் 2 நீரிழிவு நோயாளி களின் இன்சுலின் அளவை சீராக பராமரிக்கவும் உதவுகிறது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள், ரத்த அழுத்த பிரச்சினை உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் பிரச்சினை உள்ளவர்கள் நண்டை குறைந்த அளவு சாப்பிட வேண்டும்.
நண்டில் இருக்கும் செலீனியம், நம்முடைய உடலில் உள்ள திசுக்கள் மற்றும் செல்களில் ஏற்படும் சேதத்தை தடுக்க உதவுகிறது