Donald Trump: ஆத்தி..! உலக நாடுகளை மிரட்டும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.. உற்பத்தியா? வரியா?
Donald Trump at Davos: அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படாத பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படும் என அதிபட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

Donald Trump at Davos: நாடோ உறுப்பு நாடுகள் தங்களது பாதுகாப்பிற்கான பட்ஜெட்டை உயர்த்த ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் பேச்சு:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் (WEF) உரையாற்றினார். ஜனவரி 20 ஆம் தேதி நடைபெற்ற பதவியேற்பிற்குப் பிறகு, நடைபெற்ற உலகத் தலைவர்கள் மத்தியிலான இந்த உரையில் பல முக்கிய கருத்துகளை தெரிவித்தார். அதன்படி, காணொலி காட்சி மூலம் நிகழ்ச்சியில் பேசிய ட்ரம்ப் "உலகில் உள்ள ஒவ்வொரு வணிகத்திற்கும் எனது செய்தி மிகவும் எளிமையானது. அமெரிக்காவில் உங்கள் தயாரிப்பை உருவாக்க வாருங்கள், பூமியில் உள்ள எந்தவொரு நாட்டிலும் இல்லாத மிகக் குறைந்த வரிகளில் நாங்கள் உங்களுக்கு வாய்ப்புகளை வழங்குவோம். அசல் டிரம்ப் வரிக் குறைப்புகளிலிருந்தும் நாங்கள் அவற்றை மிகக் கணிசமாகக் குறைக்கிறோம்” என குறிப்பிட்டார்.
உலக நாடுகளுக்கு எச்சரிக்கை
தொடர்ந்து பேசுகையில், ”ஒருவேளை நீங்கள் அமெரிக்காவில் உங்கள் தயாரிப்பை உருவாக்கவில்லை என்றால், இது உங்கள் தனிச்சிறப்பு. பின்னர் நீங்கள் ஒரு கட்டணத்தை, வேறுபட்ட தொகைகளை செலுத்த வேண்டும். அது நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் மற்றும் டிரில்லியன் கணக்கான டாலர்களாக இருக்கலாம். எங்கள் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் கடனை அடைக்கவும் கருவூலம் உள்ளது” என பேசியுள்ளார். அதாவது வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படும் என்பதை மீண்டும் அறிவுறுத்தியுள்ளார்.
ட்ரம்பின் மற்ற திட்டங்கள்:
எண்ணெய் விலைகள் குறித்து பேசிய ட்ரம்ப், “ "சவுதி அரேபியா மற்றும் ஒபெக் நாடுகளிடமும் எண்ணெய் விலையைக் குறைக்க வேண்டும் என்று நான் கேட்கப் போகிறேன், நீங்கள் அதைக் குறைக்க வேண்டும். ஆனால் அவர்கள் தேர்தலுக்கு முன்பே செய்யாதது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. விலை குறைந்தால், ரஷ்யா-உக்ரைன் போர் உடனடியாக முடிவுக்கு வரும். காரணம் ரஷ்யாவின் வருவாய் எண்ணெய் விலையை கணிசமாக நம்பியுள்ளது. " என்று ட்ரம்ப் தெரிவித்தார்.
நேட்டோ நாடுகளுக்கு வலியுறுத்தல்
அனைத்து நேட்டோ உறுப்பு நாடுகளும் தங்கள் பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டத்தை தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். அதன்படி, "நான் அனைத்து நேட்டோ நாடுகளிடமும் பாதுகாப்பு செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% ஆக அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், இது பல ஆண்டுகளுக்கு முன்பே செய்து இருக்க வேண்டும். வெளிநாட்டில் வலிமை மற்றும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீண்டும் கொண்டு வர விரைவாக முன்னேறுகிறோம்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.





















