''ஐ.. கல்யாணம் ஆகிட்டு..'' மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து மணமகனை முத்தமிட்ட மணமகள்!
திருமணத்தின் போது விரும்பிய மணமகனைக் கைப்பிடிக்கும் மணமகள் மகிழ்ச்சியின் உச்சத்தில் துள்ளிக்குதித்து முத்தமிட்ட காட்சி அங்கிருந்தவர்களை சிரிப்பில் ஆழ்த்தியது.
பல நாடுகளில் திருமணம் என்பது கொண்டாட்டம். இந்தியாவிலும் மேளதாளங்கள் முழங்க, உறவினர்கள் நண்பர்கள் சூழ பெரிய திருவிழாவைப்போல திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். நம் வாழ்வின் இரண்டாம் பாதியை பயணிக்க கைப்பிடிக்கும் கரம் நம் மனம் விரும்பிய ஒருவர் என்றால், திருமணம் மேலும் கொண்டாட்டமாகிறது. அப்படியான ஒரு கொண்டாட்ட திருமணம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமணத்தின் போது விரும்பிய மணமகனைக் கைப்பிடிக்கும் மணமகள் மகிழ்ச்சியின் உச்சத்தில் துள்ளிக்குதித்து முத்தமிட்ட காட்சி அங்கிருந்தவர்களை சிரிப்பில் ஆழ்த்தியது. பலரும் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியான மனைவி, மகிழ்ச்சியான திருமணம் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வீடியோவில் ஜோடி திருமண சடங்கில் ஈடுபட்டுள்ளது. அவர்களுக்கு ஒருவர் சடங்குகளை செய்து திருமண ஏற்பாடுகளை செய்கிறார். ஜோடியை வாழ்த்துவதற்காக உறவினர்களும், நண்பர்களும் கூட்டமாக அமர்ந்து திருமண சடங்குகளை வேடிக்கை பார்க்கின்றனர். அப்போது ஜோடியின் திருமணம் முறையாக ரிஜிஸ்டர் செய்யப்பட்டு அறிவிக்கப்படுகிறது. அதுவரை அமைதியாக இருந்த மணப்பெண் விளையாட்டில் வெற்றி பெற்றது போல கைகளை உயர்த்தி மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கிறார். உடனடியாக ஆர்வத்தில் சத்தமிட்டதை உணர்ந்து வாயை மூடுகிறார். இதனைக்கண்ட உறவினர்கள் அனைவரும் சத்தமிட்டு சிரிக்கின்றனர். ஆனாலும் மகிழ்ச்சியில் இருந்து வெளிவராத மணப்பெண் மணமகனை கட்டிப்பிடித்து முத்தமிடுகிறார். மீண்டும் சிரிப்பலை பரவுகிறது.
இந்த வீடியோவுக்கு பதிவிட்டுள்ள பலரும் திருமண ஜோடிக்கு வாழ்த்துகளை பதிவிட்டுள்ளனர். ஒவ்வொரு மணப்பெண்ணும் இப்படியாக மகிழ்ச்சியில் திருமணத்தை சந்திக்க வேண்டும் என்றும், இது மணமகளின் அதீத அன்பை காட்டுகிறது என்றும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இது போன்ற திருமண கொண்டாட்ட காட்சிகள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது. மணமகளை தூக்கி கொண்டாடும் மணமகன், மணமேடைக்கு வரும் முன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் அழைத்து வரப்படும் மணமகள் என பல்வேறு விதமான சுவாரஸ்ய கொண்டாட்டங்கள், திருமண நிகழ்வில் நடைபெறுகிறது. அதே போல சில நேரங்களில் சங்கடமான நிகழ்வுகளும் நடப்பதுண்டு. எது எப்படியோ வாழ்வில் மறக்கமுடியாத அனுபவம் தரும் திருமணத்தில் இது போன்ற நிகழ்வுகள் அவர்களுக்கு மட்டுமல்ல, காண்போருக்கும் மகிழ்ச்சியை தருகிறது.
பீரியட்ஸ் இருந்தால், எத்தனை முறை நாப்கின் மாற்றவேண்டும்? எந்த நாப்கின் நல்லது?
View this post on Instagram